பெண்கள் செய்வது மட்டுமே சரி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள்,ஆனால் ஆண்கள் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்!! ரவி மோகன்…..

சென்னை:
ரவி மோகன், ஆர்த்தி இருவரும் 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ரவி மோகன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.

15 ஆண்டுகள் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களின் பிரிவு பலரை கவலையில் ஆழ்த்தியது.

இதற்கிடையே ரவி மோகன் பாடகி கெனிஷா இடையே காதல் உறவு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் பொது நிகழ்வுகளில் அவ்வப்போது ஒன்றாக கலந்துகொண்டு கவனம் ஈர்க்கின்றனர்.

மேலும், ரவி மோகனும், விவாகரத்து பெற்ற மனைவி ஆர்த்தியும் சமூக வளைதளங்களில் அவ்வப்போது பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரவி மோகன் இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு ரவி மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது பதிவில், “நான் எனது வாழக்கையை அமைதியான முறையில் கட்டமைத்து வருகின்றேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

பெண்கள் செய்வது மட்டுமே சரி என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆண்கள் தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள். நமது நீதித்துறை கூட அதை ஏற்றுக்கொள்கிறது.


எனது மனதையும், எனது நேசத்திற்குரியவர்களுக்கு நான் செய்தவற்றையும் ஒரு நாள் நீங்கள் அறிவீர்கள்.

ஒரு மனிதனை அமைதியுடன் வாழ விடுங்கள். உங்கள் கேவலமான எண்ணங்களை நீங்கள் உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.

நான் என் வழியில் செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனுடன் ‘வாழ்க்கை என்பது அன்பினில்’ பாடலுடன் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *