சென்னை:
த்ரிஷா பற்றி பல்வேறு விஷயங்கள் வெளியான போது குஷ்பு உள்ளிட்ட ஒரு சிலரே ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என கடந்தனர். ஆனால் நடிகர் சங்கம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதிமுக மாநிலங்களவை எம்.பி., சி.வி.சண்முகம் நடிகை நயன்தாரா பற்றி பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை த்ரிஷா ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சி.வி.சண்முகம் திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார்.
எனக்கு நயன்தாரா வேண்டும் என சொன்னால் முதலமைச்சர் நிறைவேற்றுவாரா என்ற கேள்வியெழுப்பினார். சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி., கனிமொழி, பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சி.வி.சண்முகம், நடிகை பெயர் தெரியாமல் வாய் தவறி வந்து விட்டதாக கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா பற்றி சி.வி.சண்முகம் சொன்ன கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தது. அதில், “தேர்தல் களத்தில் கருத்துரீதியா கொள்கைரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் மக்களால் இருக்கின்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டி இருக்கிறது.
ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.
சினிமா நடிகை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசி நாகரிகம் இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?
தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது ஆமோதிக்கிறார்களா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்றோம்.
தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்” என தெரிவிக்கப்பட்டது.
அவ்வளவு தான். த்ரிஷா ரசிகர்கள் நடிகர் சங்கத்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் த்ரிஷா பற்றி பல்வேறு விஷயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்றில்லாமல், சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் எதுவும் கொடுக்காத நிலையில், தரக்குறைவாக த்ரிஷாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பாக விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அரசியல் தலைவர்கள் சாடியிருந்தனர்.
ஆனால் இதனையெல்லாம் நடிகர் சங்கம் வேடிக்கை பார்த்து விட்டு நயன்தாராவை சொன்னபோது மட்டும் பொங்கியதன் காரணம் என்ன என கேள்வியெழுப்பியுள்ளனர்.
எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. சம்பந்தப்பட்டபவர்கள் அமைதியாக இருந்தால் எதுவேண்டுமானாலும் உண்மையாகி விடாது.
அதனால் நடிகர் சங்கம் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.