மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தேர்தல் களத்தில் இருக்கிறோம் – பேய், பிசாசு, பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல!! அமைச்சர் சேகர்பாபு….

சென்னை:
“கூவிக் கூவி அழைத்தும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு யாரும் வரவில்லை” என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தேர்தல் களத்தில் இருக்கிறோம். பேய், பிசாசு, பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல.

மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது என மே 4-ம் தேதி தான் தெரியவரும். 60 ஆண்டுகால உழைப்பு , முதல்வர் ஸ்டாலின் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளுக்கு வர இருக்கும் தேர்தலில் முடிவு தெரியும்.

கூவிக் கூவி அழைத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை; ஆனால் முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். திமுக கூட்டணி வலுவானது.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையை விட அதிகமாக வெற்றி கொள்வோம்.” இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *