மாணவர்கள் மனித நே​யத்​துடன் செயல்​பட்டு எளிய மக்​களின் நலனில் கவனம் செலுத்த வேண்​டும் – தமிழக ஆளுநர் அறிவுரை!!

மேலக்கோட்டையூர்:
வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள விஐடி சென்​னை​யில், தமிழ்​நாடு சட்​டக் கல்​லூரி மாணவர்கள் கூட்​டமைப்பு இணைந்து `நீ​திக்​களம்’ என்ற 2 நாள் தேசிய அளவி​லான கருத்​தரங்​கத்தை நடத்​தின.

`வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வில் சட்​டத் துறை​யின் பங்​களிப்​பு’ என்ற தலைப்​பில் நடந்த இந்த கருத்​தரங்​கில் தமிழகம் முழு​வ​தி​லுமிருந்து 700-க்​கும் மேற்​பட்ட சட்​டக் கல்​லூரி மாணவர்கள் பங்​கேற்​றனர்.

கருத்​தரங்​கின் நிறைவு விழா நேற்று நடந்​தது. விழா​வில் விஐடி துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம் வரவேற்​புரை நிகழ்த்​தி​னார்.

விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்ட தமிழக ஆளுநர் (பொறுப்​பு) ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் பேசும்​போது, “இந்​தி​யா​வில் 5 கோடிக்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

இதற்கு முக்​கியக் காரணம், நம் நாட்​டில் நீதி​மன்​றங்​கள் மற்​றும் நீதிப​தி​களின் எண்​ணிக்கை குறை​வாக இருப்​பது​தான்.

குறை​வான மக்​களே நீதித் துறையை அணுகி நீதியை பெறக் கூடிய நிலை உள்​ளது. கல்​வித் துறை சார்ந்த வழக்​கு​களும் நிலு​வை​யில் இருந்து வரு​கின்​றன.

நீதி​மன்​றங்​களில் மக்​கள் தங்​களுக்கு உண்​மை​யான நீதி கிடைக்​கும் என நீதி​மன்​றங்​களை நாடு​கின்​றனர்.

வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யாவை அடைய நீதித் துறை​வளர வேண்​டும். பொருளா​தார வளர்ச்சி மட்​டுமே நாட்​டின் வளர்ச்சி ஆகாது.

நாட்​டில் உள்ள அனை​வருக்​கும் நீதி கிடைப்​பதை உறுதி செய்​தால்​தான் உண்​மை​யான வளர்ச்​சி​யடைந்த தேசத்தை உரு​வாக்க முடி​யும். இளைஞர்​கள் ஒழுக்க நெறிகளை பின்​பற்ற வேண்​டும்.

மனிதநேயமற்ற சமூகம் முன்​னேறிய சமூக​மாக கருதப்​ப​டாது. அதனால், மாணவர்கள் மனித நே​யத்​துடன் செயல்​பட்டு எளிய மக்​களின் நலனில் கவனம் செலுத்த வேண்​டும்” என்​றார்.

விழா​வில் கவுரவ விருந்​தின​ரான சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் நீதிபதி குமரேஷ் பாபு பேசுகை​யில், “நாடு வளர்ச்சி அடைய மக்​களின் அடிப்​படை உரிமை​களை உறுதி செய்ய வேண்​டும்.

நாட்​டின் வளர்ச்​சிக்கு அரசின் பங்​களிப்பு மட்​டுமின்றி பொது​மக்​களின் ஒத்​துழைப்​பும் அவசி​யம்” என்​றார்.

விஐடி நிறு​வனர் மற்​றும் வேந்​தர் கோ.​விசுவ​நாதன் பேசும்​ போது, “மாணவர்கள் இந்​தி​யா​வின் எதிர்​கால​மாகத் திகழ்​கின்​றனர்.

இந்​தி​யா​வில் 5.4 கோடி வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதில் 2 லட்​சம் வழக்​கு​கள் 30 ஆண்​டு​களுக்கு மேலாக தேக்க நிலை​யில் உள்​ளன. மாவட்ட நீதி​மன்​றங்​களில் 8 மாதங்​களில் வழக்கை முடிக்க இலக்கு நிர்​ண​யிக்க வேண்​டும். நீதித் துறை​யில் ஏழைகள் அணுகக்​கூடிய சூழல் இல்​லை. வசதிபடைத்​தவர்​கள் மட்​டுமே அணுகக்​கூடிய நிலை உள்​ளது.

உயர்​கல்வி வளர்ச்​சிக்​காக அரசு அதிக நிதியை ஒதுக்க வேண்​டும். இளைஞர்​கள் இந்​தி​யா​வின் பலமாக விளங்கி வரு​கின்​றனர்.

எனவே, அவர்​களுக்கு சிறந்த உயர்​கல்வி கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும். தமிழகத்​தில் உள்ள பல்​கலைக்​கழகங்​கள் பலவற்​றில் துணைவேந்​தர் இல்​லை.

புதிய ஆளுநர் இதற்கு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்​டும்” என்​றார். இந்த கருத்​தரங்​கில் சிறந்த ஆய்​வுக் கட்​டுரைகளை சமர்ப்​பித்த மாணவர்​களுக்கு பதக்​கம் மற்​றும் சான்​றிதழ்​கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது.

கருத்​தரங்​கின் தொடக்க விழா​வில், மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜூ பங்​கேற்று மாணவர்​களிடம் உரை​யாற்​றி​னார்.

2 நாட்​கள் நடந்த கருத்​தரங்​கில், சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், எஸ்​.ஸ்​ரீம​தி, டி.​பாரத சக்​கர​வர்த்​தி, எல்​.சி.​விக்​டோரியா கவுரி, மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசன் ஆகியோர் பங்​கேற்​று பல்​வேறு தலைப்​பு​களில்​ மாணவர்கள்​ மத்​தி​யில்​ உரை​யாற்​றினர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *