பாஜக வேட்​பாளர் பட்​டியல் வெளி​யா​வதற்கு முன்​பாகவே, மயி​லாப்​பூரில் களப்​பணியை தீவிரப்​படுத்​தி​யுள்​ளார் தமிழிசை சவுந்​தர​ராஜன்!!

சென்னை: ​
பாஜக வேட்​பாளர் பட்​டியல் வெளி​யா​வதற்கு முன்​பாகவே, மயி​லாப்​பூரில் களப்​பணியை தீவிரப்​படுத்​தி​யுள்​ளார் தமிழிசை சவுந்​தர​ராஜன். கபாலீஸ்​வரர் பங்​குனித் தேரோட்ட விழா​வில் நேற்று அவர் உற்​சாகத்​துடன் கலந்​து​கொண்​டார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடித்​துள்​ளது. தொகு​திப் பங்​கீடு, வேட்​பாளர் தேர்​வில் அரசி​யல் கட்​சிகள் மும்​முரம் காட்டி வரு​கின்​றன. தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் பாஜக 28 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

சென்​னை​யின் முக்​கிய அடை​யாள​மான மயி​லாப்​பூர் தொகுதி அக்​கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

மயி​லாப்​பூர் தொகுதி பாஜக​வுக்கு என உறு​தி​யான அன்​றே, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் பிரச்​சார வாக​னத்​தில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜனும் வலம் வந்​தார்.

பாஜக வேட்​பாளர் பட்​டியல் அறிவிக்​கப்​படும் முன்பே பிரச்​சா​ரத்​துக்கு வந்​தது குறித்து கேட்​டதற்​கு, தொகுதி பொறுப்​பாளர் என்ற முறை​யில் பங்​கேற்​ற​தாக தெரி​வித்​தார். ஆனாலும், தொடர்ந்து மயி​லாப்​பூரில் பல்​வேறு நிகழ்​வு​களி​லும் அவர் பங்​கேற்று வரு​கிறார்.

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பங்​குனித் தேரோட்ட உற்​சவம் நேற்று நடை​பெற்​றது. அப்​போது, மக்​கள் கூட்​டத்​துக்கு இடையே கட்​சித் தொண்​டர் ஒரு​வரது இருசக்கர வாக​னத்​தில் பின்​னால் அமர்ந்து தமிழிசை அங்கு வந்​ததை மக்​கள் வியப்​புடன் பார்த்​தனர்.

பின்​னர், மாட வீதி​களில் வலம் வந்த தமிழிசை, பக்​தர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார். இளைஞர்​கள், பொது​மக்​களு​டன் செல்ஃபி எடுத்​துக்​கொண்​டார்.

தேரோட்​டத் திரு​விழா​வைத் தொடர்ந்​து, கட்​சி​யின் மத்​திய மண்டல நிர்​வாகி​கள் மற்​றும் பொது​மக்​களு​டன் இணைந்து பிரதமரின் ‘மன​தின் குரல்’ நிகழ்ச்​சி​யில் தமிழிசை பங்​கேற்​றார்.

இதெல்​லாம் பார்க்​கும்​போது, மயி​லாப்​பூர் தொகுதி வேட்​பாள​ராக தமிழிசை சவுந்​தர​ராஜன் அறிவிக்​கப்​படவே அதிக வாய்ப்பு இருப்​ப​தாக தெரி​கிறது.

மயி​லாப்​பூரில் அவர் ஏற்​கெனவே பிரச்​சா​ரத்தை தொடங்​கி​விட்​டனர் என்​கின்​றனர்​ கட்​சித்​ தொண்​டர்​கள்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *