தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது. காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம், தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது.
நிலம் பத்திரம்
நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம். ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது, அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.
தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
பிதுர் தேவதைகள்
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
அமாவாசை
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி, மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
விஞ்ஞானிகள்
அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும். அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷிய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
ஜோதிடம்
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
பூஜைகள்
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா். சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
தா்ப்பணம்
அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
சாபம்
நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் ரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம். அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.
மனக்கோளாறுகள்
பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
கோவில்கள்
நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.
குலதெய்வம்
அமாவாசை நாளில் விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவாராகி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி ஆகிய தெய்வங்களை வழிபடுவது சிறந்தது.