ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி – மும்பை அணியினருக்கு விருந்து வைத்த நிதா அம்பானி!!

மும்பை;
ஐபிஎல் தொடரின் 2-வது லீக் போட்டி கடந்த 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 220 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மேலும் ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கடைசியாக 2012ல் நடந்த தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றியிருந்தது. இதன்மூலம் 13 ஆண்டு கால சோகத்துக்கு முடிவு கட்டியது.

இந்த நிலையில் ஐபிஎல் 2026 தொடரின் தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நிதா அம்பானி ஒட்டுமொத்த அணிக்கும் பிரம்மாண்டமான இரவு விருந்து ஒன்றை அளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *