அதிமுக கேட்டுக்கொண்டதால் நெல்லைக்கு பதில், சாத்தூரில் போட்டியிடுகிறேன் – நயினார் நாகேந்திரன் பதில்!!

சென்னை:
“சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியை தான் விட்டுக் கொடுத்தது ஏன்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக கேட்டுக்கொண்டதால் நெல்லைக்கு பதில், சாத்தூரில் போட்டியிடுகிறேன்.

வேட்பாளர் பட்டியல் அறிவித்தவுடன் சாத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வேன். எந்த தொகுதிக்குச் சென்றாலும், தமிழகம் முழுவதும் மக்கள் பணி தொடரும்.

நெல்லைக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளை தான். திமுகவை அகற்ற வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டனர்.

பாஜகவில் உள்ள தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள். நாட்டுக்காகவும், கொள்கைக்காகவும் தேசத்துக்காகவும் உழைக்கக் கூடியவர்கள்.

தொகுதி எண்ணிக்கை முக்கியமல்ல, மக்கள் எண்ணம் தான் முக்கியம். பாஜக வேட்பாளர்கள் வரும் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.

நாங்கள் இன்று மாலை திமுகவின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருக்கிறோம்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரம் சரியில்லை. பிரதமர் மோடிக்கு திமுக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

கடந்த கால திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ மாதிரி, தற்போதைய திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ. மதச்சார்பு, மதச்சார்பு என சொல்லும் திமுக, அனைத்து மதங்களுக்கும் நாங்கள் தான் பாதுகாப்பு என சொல்கிறது. ஆனால் மதம் சார்ந்து இருக்கிறது அவர்கள்தான்.

முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டார். கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்லுவார்.

ஆனால் நாங்கள் இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகள் என அனைத்துக்கும் வாழ்த்து தெரிவிக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *