கோவையில் சபரீசன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பங்கேற்பு!!

கோவை,
தமிழக சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குப்பதிவு வரு கிற 23-ந் தேதி நடைபெறு கிறது.

இதையொட்டி அரசி யல் கட்சிகள் தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப் பெரிய அளவில் பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் திமுகவை மீண்டும் ஆட்சி அரியனையில் அமர வைக்க அக்கட்சி தொண்டர்கள் முனைப்புடன் களப்பணி ஆற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், இதுவரை மறைமுகமாக கட்சி பணி, தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இந்தமுறை நேரடியாக அரசியல் களத்தில் களமிறங்கி வியூகங்களை வகுத்து வருகிறார்.

சென்னையின் 16 தொகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறாராம்.

இந்த நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வைத்து கோவையின் 10 தொகுதிகளின் வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை சபரீசன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

களம் எப்படி இருக்கிறது, நாம் எந்த இடத்தில் பலவீனமாக உள்ளோம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளார்.

‘பென் டீம்’ மற்றும் உளவுத்துறை ‘ரிப்போர்ட்’அடிப்படையில் சபரீசன் கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்ட தொகுதி பொறுப்பாளர்களுடன் சபரீசன் நடத்திய களப்பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பங்கேற்றார்.

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய கோவை வந்த டி.கே.சிவக்குமார், சபரீசன் நடத்திய களப்பணி ஆலோசனையில் பங்கேற்றது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *