காரைக்குடி கம்பன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சீமானை கட்​டியணைத்த தவெக வேட்பாளர் பிரபு!!

காரைக்குடி:
தேர்தலில் 100 சதவீத வாக்​குப்​ப​திவு என்று சொல்​லி​விட்டு அரசு பேருந்​துகளை ஏற்​பாடு செய்​யாதது தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

காரைக்​குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீமான், நேற்று கம்​பன் பள்​ளி​யில் நடை​பெற்ற வாக்​குப்​ப​திவை பார்​வை​யிட்​டார். அப்​போது, தவெக வேட்​பாளர் பிரபு அங்கு வந்​தார்.

அவர், சீமானை பார்த்​ததும் கட்​டியணைத்து வாழ்த்து விசா​ரித்​தார். அதைத்​தொடர்ந்து ஆலங்​குடி​யார் அரசு பள்​ளி​யில் நடை​பெற்ற வாக்​குப்​ப​திவை சீமான் பார்​வை​யிட்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறிய​தாவது: பொங்​கல், தீபாவளி போன்ற பண்​டிகைகளுக்கு கூடு​தலாக பேருந்​துகளை இயக்​கு​கின்​றனர்.

அதே​போல் ஜனநாயக திரு​விழாவுக்கு வந்து செல்ல கூடு​தல் பேருந்​துகளை ஏற்​பாடு செய்து கொடுத்​திருக்க வேண்​டும்.

100 சதவீத வாக்​குப்​ப​திவு என்று சொல்​லி​விட்டு போதிய பேருந்​துகளை இயக்க ஏற்​பாடு செய்​யாதது தவறு.

தேர்​தல் நடத்​து​வதே ஆட்சி மாற்​றத்​ துக்​குத்தான். அதே ஆட்சி தொடரட்​டும் என்​றால் தேர்​தல் எதற்​கு, வாக்கு சதவீதம் அதி​கரிப்பு வரவேற்​கத்​தக்​கது.

வாக்​களிக்​காமல் நிராகரிப்​பதும் தேச துரோக குற்​றம்தான். அரசின் திட்​டங்​கள் அனைத்​தும் தேவை என நினைக்​கும்​போது வாக்​களிப்​ப​தை​யும் தவறாமல் செய்ய வேண்​டும்.

மக்​களுக்கு வாக்கு செலுத்த வேண்​டும் என்ற பொறுப்​புணர்வு வரவேற்​கத்​தக்​கது.

அஜித், சிவ​கார்த்​தி​கேயன் வந்​திருந்​தால் இதை​விட கூட்​டம் அதி​கம் வரும். திரை​யில் பார்த்த ஒரு நடிகரை நேரில் பார்​க்​கும்​போது ஈர்​ப்பு இருக்​கத்​​தான் செய்​யும். இவ்​​வாறு கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *