சென்னை:
இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஜ் ஸ்ரீ தேஷ் பாண்டே. அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு முதல் நிலை மார்பக புற்று நோய் இருப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,இந்த ஆண்டு மார்ச் மாதம் எனக்கு முதல் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து எனக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நோயின் தாக்கம் எனது மன உறுதியை குறைக்கவில்லை என அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் தெரியும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், என் தழும்புகள் நான் உயிர் பிழைத்த கதையை சொல்கின்றன.
ஒவ்வொரு தழும்பும் நான் போராடினேன், உயிர் பிழைத்தேன், வென்றேன் என்பதற்கான நினைவூட்டல் ஆகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.