நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்சிக்’ படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து !!

சென்னை:
மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னடத் திரையுலகின் ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் பிரமாண்டமாக உரு வாகி வரும் திரைப்படம் டாக்சிக் 1940 முதல் 1970 வரையிலான கால கட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஒரு பக்கா ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய் மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகளை படக்குழு ஏற்கனவே தனித்தனி போஸ்டர்கள் மூலம் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிக ளில் பான்-இந்தியா திரைப்படமாக ரிலீஸாகவுள்ள ‘டாக்சிக்’, முன்ன தாக கடந்த மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட் டிருந்தது.

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடை ந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 26-ந்தேதி இப்படம் உலகளவில் திரையரங்கு களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, படத்தின் விளம்பரப் பணிகளுக்காக வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றா லும், டீசர் வெளியான பிறகு சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

கியாரா அத்வானியின் ‘நாடியா’ லுக்

இந்நிலையில், இன்று நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்சிக்’ படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த போஸ்டரில், இப்படத்தில் கியாரா அத்வானி ஏற்கும் கதாபாத் திரத்தின் பெயர் ‘நாடியா’ (NADIA) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டைலிஷ் மற்றும் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ் டர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *