மக்கள் மாளிகைக்கு வந்த விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர்…

சென்னை:

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு இலாகா ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை த.வெ.க. தலைவர் விஜய் நேரில் சந்தித்தார்.

அப்போது, விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் நினைவு பரிசை வழங்கினார்.

இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும், ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

ஆளுநருடனான விஜய் சந்திப்பின் போது புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளை காலை 11.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *