திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப் பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!!

சென்னை:
மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கும் ரூ.1000 திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கொள்காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,

மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.


ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?


மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *