அதிமுக கொறடா விவகாரத்தில் இருதரப்பின் மனுக்களையும் பரிசீலித்து சட்டப்படி ஆலோசித்து முடிவை சட்டப்பேரவையில் அறிவிப்போம்!!

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.

பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.

அதிமுகவின் 47 எம்எல்ஏக்களில் 22 பேர் பழனிசாமி அணியிலும், 25 பேர் வேலுமணி அணியிலும் உள்ளனர்.

இருதரப்புமே சட்டப்பேரவையில் தங்கள் தரப்பையே அங்கீகரிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், “அதிமுகவில் இருதரப்பும் தங்கள் தரப்பின் கோரிக்கைகளை கடிதங்களாக கொடுத்துள்ளனர். கடிதம் கொடுத்து2 நாட்கள்தான் ஆகிறது.

இருதரப்பின் மனுக்களையும் பரிசீலித்து சட்டப்படி ஆலோசித்து முடிவை சட்டப்பேரவையில் அறிவிப்போம். கொறடாயார் என்பது குறித்தும் விரைவில் முடிவெடுப்போம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *