மூன்று எழுத்து இட்லி நடிகை தனது குடும்பத்தை கெடுத்ததாக கண்ணீர்விட்டு கதறி அழுத நடிகர் ரவி மோகன்!!

சென்னை:
மூன்று எழுத்து இட்லி நடிகை என குறிப்பிட்டு தனது குடும்பத்தை கெடுத்ததாக ரவிமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.


தோழி கெனிஷா சென்னையைவிட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது,”தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என நடிகர் ரவி மோகன் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.


மேலும் அவர் கூறியதாவது:-

ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். எனது பிள்ளைகளுக்காக அமைதி காத்தேன்.

எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் என்னுடன் எனக்காக நன்றவர் கெனிஷா.


அழகுக்காக செல்பவன் என்றால் எப்போதோ சென்றிருப்பேனே. என்னுடன் இருந்த என் தோழியை அனுப்பிவிட்டீர்கள்.


ஏற்கனவே என் மீது பல கோடி கடன், வழக்குகள் உள்ளன. ஆனாலும் நான் சிரித்தபடி நான் இருந்தேன்.

ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னை பிளாக்மெயில் செய்து என்னை அடிமையாக வைத்திருந்தனர்.

கையை அறுத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்துதான் ஆர்த்தி என்னை திருமணம் செய்து கொண்டார்.

மனைவி ஆர்த்தி குடும்பத்தின் மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.25,000 அனுப்பியிருக்கிறேன்.

எனது பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லை. சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை.

என் குடும்பத்தை கெடுத்தது மூன்று எழுத்து இட்லி நடிகைதான். செய்வதை செய்துவிட்டு பெண்ணியம் பேசுகிறார். எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடிகிறது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *