ஊர்க்காவல் படை​யினருக்கு கால​முறை ஊதி​யத்​துடன் கூடிய பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும் – அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை:
ஊர்க்காவல் படை​யினருக்கு கால​முறை ஊதி​யத்​துடன் கூடிய பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஊர்க்​காவல் படை​யில் பணி​யாற்றி வரும் 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இளைஞர்​கள், தங்​களுக்கு மாதம் 10 நாட்​களுக்கு பதிலாக 30 நாட்​கள் வேலை வழங்க வேண்​டும்.

பணி நிரந்​தரம் வழங்க வேண்​டும் என்ற கோரிக்​கையை மீண்​டும் எழுப்​பி​யிருக்​கிறார்​கள்.

முதல்​வர் விஜய் தலை​மையி​லான புதிய அரசு, தமிழகத்​தில் போதை ஒழிப்​பு, பெண்​கள் பாது​காப்பு ஆகிய​வற்​றுக்​கான புதிய முயற்​சிகளை தொடங்​கி​யிருக்​கும் நிலை​யில், அவற்​றுக்​கும் ஊர்க்​காவல் படை​யினரின் ஆதர​வும், ஒத்​துழைப்​பும் தேவைப்​படும்.

இவற்​றை கருத்​தில் கொண்​டும், உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை நிறைவேற்​றும் வகை​யிலும் ஊர்க்​காவல் படை​யினருக்கு கால​முறை ஊதி​யத்​துடன் கூடிய பணி நிரந்​தரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *