மேஷம்
அலைபேசி வழித்தகவலால் ஆதாயம் கிட்டும் நாள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள் பண நெருக்கடி தீரும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவி கிடைக்கும்.
ரிஷபம்
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும்.
மிதுனம்
வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணங்கள் பலன் தரும்.
கடகம்
மகிழ்ச்சி கூடும் நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்களால் விரயமுண்டு.
சிம்மம்
யோகமான நாள். சேமிப்பு உயரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
கன்னி
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர்.
துலாம்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
விருச்சிகம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சு முடிவாகும்.
கும்பம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மீனம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்.