ஆதார் அட்டை இலவச ஆன்லைன் புதுப்பிப்புக்கான கால அவகாசத்தை ஓராண்டு நீடித்தது மத்திய அரசு!…

சென்னை:
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான கால அவகாசத்தை மத்திய அரசு ஓராண்டு நீடித்துள்ளது.

இதனால் புதுப்பிக்காதவர்கள் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் மை ஆதார் இணையதளம் மூலம் இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்.

ஏற்கனவே இந்த சலுகை ஜூன் மாதத்துடன் நிறைவடையும் என அறிவித்திருந்தது. 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் எடுத்தவர்கள் இது வரையிலும் புதுப்பிக்காமல் இருப்பவர்கள் அனைவருமே தங்களது ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ளுமாறு யுஐடிஏஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்கு முன்னதாக 2026 ஜூன் மாதம் வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

தற்போது 1 ஆண்டுக்கு 2027 ஜூன்14 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இலவசமாக ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது.

யுஐடிஏஐ-ன் அதிகாரபூர்வ மை ஆதார் போர்டல் மூலமாகவோ அல்லது புதிய ஆதார் ஆப் மூலமாகவோ தங்களாவே தங்களின் ஆவணங்களை பதிவேற்றினால் கட்டணம் ஏதும் இல்லை என்றும் அறிவித்திருக்கிறது.

ஆனால் இந்த பதிவை நீங்கள் இ – சேவை மையம் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்தால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று யுஐடிஏஐ கூறிவருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *