சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ரஹீம் என்பவரை 20 ஆண்டுகளுக்கு பின்பு விடுதலை செய்த நீதிமன்றம்!!

சவுதி அரேபியா;
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ரஹீம் என்பவரை 20 ஆண்டுகளுக்கு பின்பு அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.


கடந்த 2006-ஆம் ஆண்டு கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் ரஹீம் வேலை வாய்ப்பு தேடி வளைகுடா நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு ரஹீம் கவனித்து கொண்டிருந்த சவுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனின் தற்செயலான மரணத்திற்கு காரணமாக இருந்ததால் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதையடுத்து உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் ரஹீமுக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுத்ததால், 2018-ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


மேலும் அதற்கு ஈடாக குறிப்பிட்ட காலத்திற்குள் ரூ.34 கோடி செலுத்தினால் மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

ரஹீமை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காக கேரள மக்கள் ஒன்று திரண்டு ரூ.34 கோடியை திரட்டி சவுதி நீதிமன்றத்தில் செலுத்தினர்.


இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ரஹீமின் மரண தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கரிப்பூர் விமான நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்பு தரையிரங்கிய ரஹீமை அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரஹீம், “எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

எனக்கு பண உதவிசெய்து, என் தாயை மீண்டும் பார்க்க உதவிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *