மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் – மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார்!! அமைச்சர் நிர்மல்குமார்…..

சென்னை:
“மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம்.

மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைவில் நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

போக்சோ குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தரப்படும். கோவை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, ஒவ்வொரு நாளும் அப்டேட் கொடுத்துள்ளோம்.

மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவின் டி.கே.சிவகுமார் பொறுப்பின்றி பேசுகிறார். தேவையில்லாமல் அரசியல் செய்கிறார். சர்ச்சை ஏற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம்.

இரு மாநில மக்களுக்கு இடையில் நிறைய தொழில் உறவுகள் உள்ளன. சட்டப்பூர்வமாக மட்டுமே அவர்கள் செயல்பட வேண்டும்.

டி.கே.சிவகுமார் தன்னிச்சையாக பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *