கங்கை அமரன் எழு​தி​யுள்ள ‘உயிரிணை​யே’ என்ற இசை ஆல்​பம் வெளி​யீட்டு விழா!!

சென்னை:
இயக்​குநர், பாடலாசிரியரு​மான கங்கை அமரன் எழு​தி​யுள்ள ‘உயிரிணை​யே’ என்ற இசை ஆல்​பம் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்​றது.

இதை டிரம்ஸ் ஜெர்ரி என்​டர்​டெ​யின் ​மென்ட் சார்​பில் கிளாடி ஜெரால்டு தயாரித்​துள்​ளார்.

சகோ கணேசன் ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். சதா சுதர்​சனம் இசை அமைத்துள்ள இந்த ஆல்பத்தின் பாடல்​களை தவசீலிதன் ​ராஜ், பர்​ஹான் நவாஸ் ஆகியோர் பாடி​யுள்​ளனர்.

கங்கை அமரன் பேசும்​போது, “முன்பெல்​லாம் ஒரு பாடலை தொடரலையாக பாடு​வோம்.

இப்​போது ஒவ்​வொரு வரி​யாகப் பாடுகிறோம். செயற்கை தொழில்​ நுட்​பத்​தில் (ஏ.ஐ) ஃபீட் பண்ணிப் பாடு​கிறோம். அதற்கு நாம் எப்​படி நம்​மைப் பெரு​மைப்​படுத்​திக் கொள்வது ?

உண்​மை​யைச் சொல்ல வேண்​டுமென்​றால் ஏ.ஐ. தொழில்​ நுட்​பம் நம்​மைக் கெடுத்​துக் கொண்​டிருக்​கிறது என்பதை உறு​தி​யாகச் சொல்​கிறேன்.

அதை நம்பி வேலை செய்தால் பிற்​காலத்​தில் மூளை வேலை செய்​யாது.

ஒரு தீமை ஏ.ஐ-​யிடம் கொடுத்து விட்​டால், அதுவே பாட்​டெழுதி விடு​கிறது. இதில் எப்​படி நம் பெயரைப் போட்​டுக் கொள்​வது.

எதற்​குச் சொல்​கிறேன் என்​றால் வருங்​கால குழந்​தைகள் தன்னால் சிந்​திக்​கக் கற்​றுக் கொள்ள வேண்​டும், எழுதத் தெரிந்திருக்க வேண்​டும்.

வருங்​கால குழந்​தைகள் தன்​னிடம் இருக்​கின்ற சுய ரூபங்​களை வெளி​யில் கொண்டு வர வேண்​டும் என்​பது என் மனமார்ந்த ஆசை” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *