அரசு மருத்​து​வ​மனை​களில் 24 மணி நேர​மும் மருத்துவர்கள் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும் என்​று, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

சென்னை:
அரசு மருத்​து​வ​மனை​களில் 24 மணி நேர​மும் மருத்துவர்கள் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும் என்​று, அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை:

திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் மருத்​து​வர்​கள் இல்​லாத காரணத்​தி​னால், காயமடைந்த நிலை​யில் வந்த நபருக்கு தூய்​மைப் பணி​யாளர் ஒரு​வர் சிகிச்சை அளிப்​பது போல ஊடகங்​களில் வெளி​யாகி​யிருக்​கும் செய்​தி​கள், தமிழகத்​தின் சுகா​தார கட்​டமைப்பு எவ்​வளவு மோச​மான நிலை​யில் இருக்​கிறது என்​பதை வெளிச்​சம் போட்டு காட்​டு​கிறது.

அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் உட்பட அடிப்​படை பணி​யாளர்​கள் கூட இல்​லாமல் இருப்​பதும், தூய்​மைப் பணி​யாளர்​கள் சிகிச்சை அளிப்​பதும் அங்கு வரும் பொது​மக்​கள் மற்​றும் நோயாளி​களின் உயிரோடு விளை​யாடும் செய​லாகும்.

எனவே, தமிழகம் முழு​வதும் உள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள் தொடங்கி அரசு தலைமை மருத்​து​வ​மனை​கள் வரை உரிய ஆய்வு மேற்​கொண்​டு, அங்கு 24 மணிநேர​மும் சுழற்சி அடிப்​படை​யில், மருத்​து​வப் பணி​யாளர்​கள் இருப்​பதை தமிழக அரசும், சுகா​தா​ரத் துறை​யும் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *