சட்ட ஒழுங்கில் கூடு​தல் முயற்​சிகளை அரசு எடுக்க வேண்டும் – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!!

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீர​பாண்​டியன் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளுவருக்கு காவி உடை அணி​வித்​தது ஏற்​புடையதல்ல.

திரு​வள்​ளூர் தமிழின் குறி​யீடு. அதை வலது பக்​கம் திருப்​பும் முயற்​சி​யில் ஆளுநர் ஈடு​படகூ​டாது.

கலா​சார கூறுகளை ஆளுநர் மதித்து நடத்த வேண்​டும், தமிழ் பன்​பாடு​களை, 100 ஆண்​டு​களாக கம்​யூனிஸ்ட் கட்​சிகள் குதிரை பேரம் என்ற வார்த்​தையை செவி​யில் கூட கேட்​ட​தில்​லை.

இது மக்​கள் அளித்த தீர்ப்​பின் மீதான தாக்​குதல். இதை நாங்​கள் எதிர்க்​கிறோம், கண்​டிக்​கிறோம்.

முதல்​வர் கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்ற காலம் எடுத்​துக்​கொள்​ளலாம். ஆனால், சட்ட ஒழுங்​கில் காலஅவகாசம் கூடாது.

அரசு, அதி​காரி​கள், காவல்​துறை, பல ரகசிய பிரிவு​கள் உள்​ளன. அவை முடிக்​கி விடப்பட வேண்​டும். எந்த வகை​யிலும் பாது​காப்​பற்ற சூழல் நில​வக்​கூ​டாது.

சட்ட ஒழுங்கில் கூடு​தல் முயற்​சிகளை அரசு எடுக்க வேண்டும். பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களை தடுக்க அரசு கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *