இன்​னும் 3 மாத​மாவது தாங்​குமா என்ற கேள்விக்​குறியோடு​தான் தவெக ஆட்சி நடந்து வரு​கிறது – ஸ்டா​லின் விமர்​சிப்பு!!

சென்னை: ​
விசிக முன்​னாள் எம்​எல்ஏ பனையூர் பாபு, ஸ்டா​லின் முன்​னிலை​யில் திமுக​வில் இணைந்​தார். இந்த நிகழ்​வில், இன்​னும் 3 மாத​மாவது தாங்​குமா என்ற கேள்விக்​குறியோடு​தான் தவெக ஆட்சி நடந்து வரு​வ​தாக ஸ்டா​லின் விமர்​சித்​தார்.

கடந்த 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் விசிக சார்​பில் செய்​யூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர் பனையூர் பாபு. விசிக ஊடகப் பிரிவு முதன்​மைச் செய​லா​ள​ராக​வும் இருந்து வந்​தார்.

2026 தேர்​தலில் அதே தொகு​தி​யில் சீட் மறுக்​கப்​பட்​ட​தால் அதிருப்​தி​யில் இருந்​தார்.

தேர்​தலுக்​குப் பிறகு, தவெக​வுக்கு ஆதர​வளித்த விசிக, திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறி, அமைச்​சர​வை​யிலும் பங்​கேற்​றது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து விசிக​வில் இருந்து பனையூர் பாபு கடந்த மே 24-ம் தேதி வில​கி​னார்.

இந்​நிலை​யில், சென்னை அண்ணா அறிவாலயத்​தில் திமுக தலை​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில் பனையூர் பாபு தனது ஆதர​வாளர்​களு​டன் நேற்று திமுக​வில் இணைந்​தார்.

தவெக, அதி​முக, காங்​கிரஸ், மதி​முக உள்​ளிட்ட கட்​சிகளில் இருந்​தும் 1,000-க்​கும் மேற்​பட்​டோர் திமுக​வில் இணைந்​தனர்.

இந்த நிகழ்​வில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, துணை பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி., பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: சட்​டப்​பேர​வை​யில் ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகள், பிரச்​சினை​களை வலி​யுறுத்​திப் பேசக்​கூடிய​வர் பனையூர் பாபு.

ஒடுக்​கப்​பட்ட மக்​களின் நலனுக்​காக தனது பயணம் இருக்​கும் என்று அவர் கூறி​யுள்​ளார். அதற்கு சரி​யான இயக்​கம் திமுக என்​பதை உணர்ந்து இங்கு இணைந்​துள்​ளார்.

தவெக ஆட்சி பற்றி நான் அதி​கம் சொல்​லத் தேவை இல்​லை. ஏற்​கெனவே இந்த ஆட்​சிப் பொறுப்​பேற்ற நேரத்​தில், ‘6 மாதங்​களுக்கு இதைப் பற்றி பேசப் போவ​தில்​லை’ என்​றேன்.

ஆனால், 6 மாதங்​களுக்கு முன்பே பேச வேண்​டிய சூழ்​நிலை வந்​து​விடுமோ என்று அஞ்​சுகிறேன்.

6, 5, 4 மாதங்​கள்​கூட அல்ல, இன்​னும் 3 மாத​மாவது தாங்​குமா என்ற கேள்விக்​குறியோடு​தான் இந்த ஆட்சி நடந்து கொண்​டிருக்​கிறது.

இவ்​வாறு அவர் பேசி​னார். பனையூர் பாபு பேசும்​போது, ‘‘தலித் மாணவர்​கள் அயல​கம் சென்று படிக்​கும் திட்​டத்​தில் ஆண்​டுக்கு 10 பேர்​கூட பயனடை​யாத நிலை இருந்​தது.

ஸ்டா​லின் தலை​மை​யில் திமுக அரசு அமைந்த பிறகு, கடந்த 5 ஆண்​டு​களில் 410 மாணவர்​கள் வெளி​நாடு சென்று படிக்​கின்​றனர்.

ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்​சம் வரை அரசு வழங்​கி​யுள்​ளது. ஆனால், ஒரு கவர்ச்​சி​யான அரசி​யலின் பின்​னால் சென்ற மக்​கள், எல்​லாம் பொய் என்​ப​தை 30 நாட்​களி​லேயே உணர்ந்​து​விட்​டனர்​’’ என்றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *