மூடப்​பட்ட கடை பணி​யாளர்​கள் 500 பேருக்கு இளநிலை உதவி​யாளர்​களாக பதவி உயர்வு!!

சென்னை:
தமிழகத்​தில் கடந்த 2017-ம் ஆண்டு நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தேசிய மற்​றும் மாநில நெடுஞ்​சாலைகளில் உள்ள மூன்​றா​யிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்​பட்​டன.

அந்த கடைகளில் பணி​யாற்​றிய​வர்​களை அனைத்து மாவட்ட மற்​றும் மண்​டலங்​களில் உள்ள நிர்​வாக அலு​வல​கங்​களில் பணி​யமர்த்த முடிவு செய்​யப்​பட்​டது.

அதற்​காக கல்​வித் தகுதி மற்​றும் வயது வரம்பை குறைத்து சிறப்புத் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறு​வோருக்கு பணி வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

மூடப்​பட்ட கடை பணி​யாளர்​கள் 500 பேருக்கு இளநிலை உதவி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இளைநிலை உதவி​யாளர்​களாக பதவி உயர்வு பெற்​றவர்​களுக்கு 5 ஆண்​டு​களில் பதவி உயர்வு வழங்க வேண்​டும்.

அதன்​படி, நேற்று 200 இளைநிலை உதவி​யாளர்​களுக்கு உதவி​யாள​ராக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், டாஸ்​மாக் சில்​லறை விற்​பனை கடைகளில் பணி​யாற்​றும் மாற்றுத் திற​னாளி​கள் 7 பேருக்கு இளநிலை உதவி​யாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, புதிய அரசு அமைந்​த​பிறகு 717 மது​பான கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

இந்​தக் கடைகளில் பணி​யாற்​றிய​வர்​களை, தற்​போது உரு​வாகி​யுள்ள 200 இளநிலை உதவி​யாளர்​கள் காலிப்​பணி​யிடங்​களில் பணி​யமர்த்த வேண்​டும் என டாஸ்​மாக் பணி​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *