அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்த நிலை​யில், அந்த 4 தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் அறி​விப்​புக்கு தடை விதிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதி​முக வழக்கு !!

சென்னை:
அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்த நிலை​யில், அந்த 4 தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் அறி​விப்​புக்கு தடை விதிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதி​முக வழக்கு தொடர்ந்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு கொண்​டு​வந்த நம்பிக்கை வாக்​கெடுப்​பின்​போது, அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 அதி​முக எம்​எல்​ஏக்​கள், தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

அதைத்​தொடர்ந்​து, அவர்​களுக்கு எதி​ராக கட்​சித்​தாவல் தடைச்​சட்​டத்​தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்​கக் கோரி, பேர​வைத் தலை​வரிடம் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மனு அளித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், அதி​முக எம்​எல்​ஏக்​கள் மரகதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்), ஆகியோர் தங்​கள் எம்​எல்ஏ பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

தகுதி நீக்க நடவடிக்கை நிலு​வை​யில் உள்​ள​போது, அவர்​களின் ராஜி​னாமா கடிதங்​களை சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​டதை எதிர்த்து தேசிய மக்​கள் சக்தி கட்சி சார்​பில் அதன் தலை​வர் எம்​.எல்​.ர​வி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்​மா​தி​காரி, நீதிபதி அருள் முரு​கன் அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​த​போது, அதி​முக முன்​னாள் அமைச்​சர் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் எஸ்​.ஆர்​.​ராஜகோ​பால், “4 எம்​எல்​ஏக்​கள், தவெக​வில் இணைவது குறித்து ஏற்​கெனவே பேச்​சு​வார்த்தை நடத்​தி​யுள்​ளனர்.

ராஜி​னாமா செய்​ததும், தவெக​வில் இணைந்​துள்​ள​தால், இது திடீரென எடுத்த முடி​வல்ல.

இதில் அரசி​யல் சட்​ட​வி​தி​கள் மீறப்​பட்​டுள்​ள​தால், ராஜி​னா​மாவை ஏற்ற உத்​தரவை ரத்து செய்​யக் கோரி​யும், அந்த 4 தொகு​தி​களுக்கு இடைத்​தேர்​தல் அறிவிக்க தடை​வி​திக்​கக் கோரியும் வழக்கு தொடர்ந்​துள்​ள​தால், அந்த வழக்​கை​யும் சேர்த்து விசா​ரணைக்கு எடுக்க வேண்​டும்” என கேட்​டுக்கொண்​டார்.

தமிழக அரசுத் தரப்​பில் ஆஜரான தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், “கொறடா உத்​தரவை மீறி, தவெக அரசுக்கு வாக்​களித்த 25 அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி மனு அளித்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 21 பேரின் மன்​னிப்பை ஏற்​றுக் கொண்​ட​தாக கடிதம் அளித்​தார்.

அதனால் அவர்​கள் மீதான நடவடிக்கை கைவிடப்​பட்​டுள்​ளது. ராஜி​னாமா செய்த 4 பேரும் தாமாக முன்​வந்து பதவி வில​கி​யுள்​ளனர். இருப்​பினும், தகுதி நீக்க நடவடிக்கை தொடர்​பாக விளக்​கம் கேட்டு அவர்​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேரவை விதிப்​படி, அவர்​களுக்கு எதி​ரான நடவடிக்​கை​யில் உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்” எனத் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, அதிமுக தரப்​பின் கோரிக்​கையை ஏற்ற நீதிப​தி​கள், வழக்​கு​களின்​ வி​சா​ரணை​யை ஜூன்​ 17-ம்​ தேதிக்​கு தள்​ளி​வைத்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *