தமிழகம் முழு​வதும் 17 மாவட்ட எஸ்​.பி.க்​கள் உள்பட 56 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம்!!

சென்னை:
தமிழகம் முழு​வதும் 17 மாவட்ட எஸ்​.பி.க்​கள் உள்பட 56 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுதொடர்​பாக உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த டிஐஜி உமா, சென்னை காவல்​துறை தலை​மை​யிடத்து இணை ஆணை​ய​ராக​வும், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு துணை ஆணை​யர் (1) செல்​வ​ராஜ், உயர் நீதி​மன்ற பாது​காப்பு பிரிவு துணை ஆணை​ய​ராக​வும், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றத் தடுப்பு பிரிவு துணை ஆணை​யர் ஜி.வனிதா ஆவடி காவல் ஆணை​யரக தலை​மை​யிடம் மற்​றும் நிர்​வாகப்​பிரிவு துணை ஆணை​ய​ராக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

காத்​திருப்​போர் பட்​டியலில் வைக்​கப்​பட்​டிருந்த எஸ்பி கோபி, சென்னை பூக்​கடை துணை ஆணை​ய​ராக​வும், தி.நகர் துணை ஆணை​யர் எஸ்​.

குத்​தாலிங்​கம் சேலம் எஸ்​பி​யாக​வும், அடை​யாறு துணை ஆணை​யர் ஏ.சி.​கார்த்​தி​கேயன் திரு​வண்​ணா​மலை எஸ்​பி​யாக​வும், பள்​ளிக்​கரணை துணை ஆணை​யர் ஆர்​.பொன்​கார்த்​திக் குமார் திருச்சி தலை​மை​யிட துணை ஆணை​ய​ராக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர்.

திரு​வள்​ளூர் எஸ்பி விவே​கானந்த சுக்லா கடலூர் எஸ்​பி​யாக​வும், விழுப்​புரம் எஸ்பி சாய் பிரனீத் திரு​வள்​ளூர் எஸ்​பி​யா​வும், கடலூர் எஸ்பி ஜெயகு​மார் திண்​டுக்​கல் எஸ்​பி​யாக​வும், திரு​வண்​ணா​மலை எஸ்பி டாக்​டர் எம்​.சு​தாகர் வெளி​நாடு வாழ் இந்​தி​யர் (என்​ஆர்ஐ) பிரிவு எஸ்​பி​யாக​வும், மதுரை வடக்கு துணை ஆணை​யர் எஸ்​.ம​தி​வாணன் விழுப்​புரம் எஸ்​பி​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

அதே​போல், சேலம் எஸ்பி கவுதம் கோயல் விருதுநகர் எஸ்​பி​யாக​வும், டிஜிபி அலு​வல​கத்​தில் உள்ள தலை​மை​யிடத்து உதவி ஐஜி அருண் கபிலன் தரு​மபுரி எஸ்​பி​யாக​வும், அரியலூர் எஸ்பி விஸ்​வேஷ் பாலசுப்​ரிமணி​யம் சாஸ்​திரி திருநெல்​வேலி எஸ்​பி​யா​வும், விருது நகர் எஸ்பி என்​.​நாதா டிஜிபி அலு​வலக தலை​மை​யிடத்து உதவி ஐஜி​யாக​வும், சென்னை வடக்கு மண்டல பொருளா​தார குற்​றப்​பிரிவு எஸ்பி எஸ்​.செல்​வகு​மார் அரியலூர் எஸ்​பி​யாக​வும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர்.

இவர்​கள் உள்பட 56 போலீஸ் அதி​காரி​கள் பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இவர்​களில் 17 மாவட்ட எஸ்​பி-க்​களும் அடங்​கு​வர். இவ்​வாறு உள்​துறை செயலர் கே.மணி​வாசன் உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *