ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…… அப்பாவைக் காணோம் என்று கேலி செய்யும் வகையில் முதல்வர் பேசியது மிகவும் தவறானது – குட்டிக் கதை மீது பெ.சண்முகம் விமர்சனம்!!

சென்னை:
“ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதல்வர் பேசியது மிகவும் தவறானது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது.

அதிலும் குறிப்பாகச் சட்டப் பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றி, “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதல்வர் பேசியது மிகவும் தவறானது.

இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என்று பேசியதும் தவறுதான்.

“ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *