பழநி முரு​கன் கோயி​லில் விரைவு தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி ரூ.3 ஆயிரம் லஞ்​சம் பெற்ற 3 காவலா​ளி​கள் பணிநீக்​கம் !!

பழநி:
பழநி முரு​கன் கோயி​லில் விரைவு தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி ரூ.3 ஆயிரம் லஞ்​சம் பெற்ற 3 காவலா​ளி​கள் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டனர். சம்​பந்​தப்​பட்ட செக்​யூரிட்டி நிறுவனத்​துக்கு ரூ.5 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது.

சில நாட்​களுக்கு முன்பு பழநி வந்த வெளியூர் பக்​தர்​கள் 3 பேர், தனி​யார் காவலா​ளி​கள் 2 பேரிடம் விரைவு தரிசனம் குறித்து கேட்டு ள்ளனர்.

இதற்காக ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொண்ட காவலாளி​கள், கோயிலில் இருந்த மற்​றொரு காவலாளி மூலம் விரை​வாக தரிசனம் செய்ய வைத்​துள்ளனர்.

இந்​தச் சம்​பவம் அந்த பக்​தர்​களின் உறவின​ரான கோயில் பணியா ளர் ஒரு​வருக்​குத் தெரிய​வந்​தது. தகவலறிந்த கோயில் இணை ஆணை​யர் மாரி​முத்​து, சிசிடிவி கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்து விசா​ரணை நடத்​தி​னார்.

இதில், காவலா​ளி​கள் மீதான குற்​றச்​சாட்​டு​கள் உண்மை எனத் தெரிய​வந்​தது. இதையடுத்து காவலா​ளி​கள் 3 பேரும் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

மேலும், சம்​பந்​தப்​பட்ட தனி​யார் செக்​யூரிட்டி நிறு​வனத்​துக்கும் ரூ.5 லட்​சம் அபராதம் விதித்து இணை ஆணையர் உத்​தர​விட்​டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *