இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்யராஜ் உடல் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன் சென்​னை​யில் நேற்று தகனம்!!

சென்னை:
இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்யராஜ் உடல் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன் சென்​னை​யில் நேற்று தகனம் செய்​யப்​பட்​டது.

பிரபல இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ் கடந்த 27-ம் தேதி காலை நடைப​யிற்சி சென்​று​விட்டு வீட்​டுக்கு வந்​த​போது மாரடைப்பு ஏற்​பட்டு கால​மா​னார். அவருக்கு வயது 73.

அவரது மறைவு அதிர்ச்​சி​யை​யும், சோகத்​தை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள வீட்​டில் அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின், விசிக தலை​வர் திரு​மாவளவன், நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், மநீம தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்ட அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் அஞ்​சலி செலுத்​தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் கூறினர்.

இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்​.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​க​னி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன், சந்​தான​பார​தி, லிங்​கு​சாமி, நடிகர்​கள் ரஜினி​காந்த், மம்​மூட்​டி, பார்த்​திபன், சரத்​கு​மார், தனுஷ், சிவ​கார்த்​தி​கேயன், சூரி, ஜெய​ராம், விக்​ரம்​பிரபு, மலை​யாள நடிகரும் எம்​.பி.​யு​மான சுரேஷ் கோபி, திலீப், நடிகைகள் ராதி​கா, சுஹாசினி, ரேவ​தி, அம்​பி​கா, ராதா, நயன்​தா​ரா, த்ரிஷா, சினேகா உட்பட திரை​யுல​கினர் ஏராள​மானோரும், பொதுமக்களும் அஞ்​சலி செலுத்​தினர்.

பொது​மக்​கள் அஞ்​சலிக்​குப் பிறகு, பாக்​ய​ராஜ் உடல் நேற்று காலை நுங்​கம்​பாக்​கம் லேக் ஏரி​யா​வில் உள்ள அவரது வீட்​டில் இருந்​து, கதீட்​ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காம​ராஜர் சாலை, சாந்​தோம் வழி​யாக பெசன்ட் நகர் மின் மயானத்​துக்கு ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்​டது.

இறுதி ஊர்வல வாக​னத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​யில் ‘அன்​புடன் உங்​கள் கே.​பாக்​ய​ராஜ்’ என்ற வாசகத்​துடன் அவரது கையெழுத்​தும் இடம்​பெற்​றிருந்​தது.

அந்த வாக​னத்​தில் பாக்​ய​ராஜ் உடல் அருகே அவரது மனைவி பூர்​ணி​மா, மகள் சரண்​யா, மகன் சாந்​தனு, மரு​மகள் கீர்த்தி ஆகியோர் கண்​ணீர் மல்க அமர்ந் ​திருந்​தனர்.

வழிநெடு​கிலும் ஏராள​மான ரசிகர்​கள், பொது​மக்​கள் சாலை​யின் இரு​புற​மும் திரண்டு நின்று மலர் தூவி இறுதி மரி​யாதை செலுத்​தினர்.

திரைத்​துறை​யில் பாக்​ய​ராஜின் பங்​களிப்​பைப் போற்​றும் வகை​யில் அவருக்கு அரசு மரி​யாதை வழங்​கப்​படும் என்று தமிழக அரசு ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தது.

அதன்​படி, இறுதி ஊர்​வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை வந்​தடைந்​ததும், பாக்​ய​ராஜ் உடலுக்கு அரசு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.

அமைச்​சர்​கள் ஆனந்த், ராஜ் மோகன் ஆகியோர் மலர் வளை​யம் வைத்து பாக்​ய​ராஜ் உடலுக்கு இறுதி அஞ்​சலி செலுத்​தினர்.

பின்​னர், காவலர்​கள் 72 குண்​டு​கள் முழங்க, அரசு மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. பின்​னர், மகன் சாந்​தனு கண்​ணீருடன் இறு​திச்​சடங்​கு​களை செய்​த பிறகு, உடல்​ தகனம்​ செய்​யப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *