சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பென் ஸ்டோக்ஸ்!!

லண்டன்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

அந்த அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் 373 ரன்கள் இலக்கை இங்கிலாந்து விரட்டி வருகிறது. நான்காவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.

வெற்றிக்கு கடைசி நாளான இன்று இன்னும் 270 ரன்கள் தேவைப் படுகிறது. நியூஸிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவை. இந்நிலையில், தனது ஓய்வை ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

“அடுத்த இரண்டு நாட்களில் ஏதோவொன்று நடைபெற உள்ளது என்பதை நான் அறிவேன்.

உங்களின் கேப்டனாகவும், இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடுவதும் இதுவே கடைசி இரண்டு நாட்கள். அணியின் நலனுக்காக பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள் ளேன்.

அந்த வகையில் இதையும் ஒரு பயணமாக பார்க்கிறேன்” என இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக கடந்த 2013 முதல் 122 டெஸ்ட் போட்டிகளில் ஸ்டோக்ஸ் விளையாடி உள்ளார். 220 இன்னிங்ஸில் 7,273 ரன்கள் மற்றும் 252 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் 14 சதம் எடுத்துள்ளார்.

6 முறை 5+ விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றி உள்ளார். கடந்த 2022 முதல் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக அவர் செயல்பட்டு வந்தார்.

அவரது தலைமையிலான அணி அதிரடி பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகியது.

2019-ல் உலகக் கோப்பை மற்றும் 2022-ல் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஸ்டோக்ஸ் இடம்பெற்றிருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *