முதல்வர் விஜய்யுடன் கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சந்திப்பு!!

சென்னை:
கேரள உள்​துறை அமைச்​சர் ரமேஷ் சென்​னிதலா நேற்று தமிழக முதல்​வர் விஜய்யை சந்​தித்​தார்.

பிறகு அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அனைத்து தென்​னிந்​திய மாநிலங்​களி​லும் நடந்து வரும் போதைப்​பொருள் அச்​சுறுத்​தல் குறித்து முதல்​வரிடம் விவா​தித்​தோம்.

இந்த விவ​காரத்தை கையிலெடுத்து எங்​களுக்கு உதவு​மாறு முதல்​வரிடம் கேட்​டுக்​கொண்​டேன். கேரளம் அரசு ஏற்​கெனவே போதைப்​பொருள் வேட்​டை​யாக ஆபரேஷன் தூபான் என்ற திட்​டத்​தைத் தொடங்​கி​யுள்​ளது.

கடந்த 43 நாட்​களாக இந்​தத் திட்​டத்தை வெற்​றிகர​மாக நடத்தி வரு​கிறோம். போதைப்​பொருள் அச்​சுறுத்​தல் என்​பது ஒரு மாநிலத்​தில் மட்​டுமல்ல, நாட்​டின் அனைத்து இடங்​களி​லும் இருக்​கும் மிகப்​பெரிய பிரச்​சினை.

எல்​லைப் பகு​தி​களில் எங்​களுக்கு உதவுவதற்​காக தமிழக முதல்​வரின் ஆதரவை நாடி இங்கு வந்​துள்​ளோம். கடந்த வாரம் அனைத்து மாநில டிஜிபிக்​களின் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் போதைப்​பொருள் மாஃபி​யா​வுக்கு எதி​ராக எப்​படி போர் தொடுப்​பது என்​பது குறித்து நாங்​கள் விவா​தித்து ஒரு திட்​டத்தை உரு​வாக்​கினோம்.

அதுகுறித்து முதல்​வரிடம் விவா​தித்​தோம். அவர் ஆபரேஷன் தூபான் திட்​டத்​துக்கு முழு ஆதரவை வழங்​கி​யுள்​ளார். ‘தமிழக-கேரள எல்​லைப் பகு​தி​கள் அனைத்​தும் முழு​மை​யாகக் கண்​காணிக்​கப்​பட்டு சீல் வைக்​கப்​படும்.

போதைப்​பொருட்​களைக் கொண்​டுவர அல்​லது விற்க முயல்​பவர்​களைப் பிடிக்க இரு மாநில போலீஸ் படைகளும் கைகோர்த்​துச் செயல்​படும்’ என, முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

இதையடுத்து இரு மாநிலங்​களும் இணைந்து விழிப்​புணர்வு பிரச்​சா​ரங்​களை மேற்​கொள்​ளும் வகை​யில் விஜய்யை கேரளா​வுக்கு அழைத்​துள்​ளேன். அதற்​கும் விஜய் சம்​மதம் தெரி​வித்​துள்​ளார்.

கேரள மாநிலத்​தின் விழிப்​புணர்வு தூதர் மோகன்​லாலுடன் விஜய் இணைந்து கேரளா​வில் ஒரு பெரிய விழா​வில் பங்​கேற்​பார்​கள்.

கடந்த வாரம் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாரை சந்​தித்​தேன். கர்​நாடக எல்​லைப் பகு​தி​களில் கேரள அரசுக்கு உதவுவ​தாக அவரும் உறு​தி​யளித்​துள்​ளார்.

எனவே அனைத்து தென்​னிந்​திய மாநிலங்​களின் ஒருங்​கிணைந்த முயற்சி நிச்​சய​மாக இந்த சூழ்​நிலையை மேம்​படுத்​தும். குறிப்​பாக இளைஞர்​கள்,

பள்​ளிக்​குச் செல்​லும் மாணவர்​கள் மற்​றும் கல்​லூரி மாணவர்​கள் இந்த மாஃபி​யா​வால் குறிவைக்​கப்​படு​கிறார்​கள்.

அனைத்​துக் கட்​சிகளும் போதைப்​பொருள் விற்​பனையை தடுக்க முன்வர வேண்​டும்.

இது ஒரு பெரிய அச்​சுறுத்​தல், நாட்​டிற்கு எதி​ரானது. போதைப்​பொருளுக்கு எதி​ராக நாம் போரிட வேண்​டும். இதற்​கான திட்​டத்தை நாங்​கள் வகுத்​துள்​ளோம். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *