சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனையில் கூடுதல் கழிவறைகள் கட்ட அமைச்சர் அருண்ராஜ் உறுதி!!

சென்னை:
சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை, கிங் நிலைய வளாகத்​தில் கட்​டப்​பட்டு வரும் புதிய குழந்​தைகள் உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் கட்​டு​மானப் பணி​களைச் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று ஆய்வு செய்​தார்.

முதலில் கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனைக்​குச் சென்று நோயாளி​கள் பதிவு செய்​வதற்​காக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள “நலம் ஏஐ” செயலி​யின் செயல்​பாடு​களை ஆய்வு செய்​தார்.

மருத்​து​வ​மனையில் உள்ள கழி​வறை வசதி​களை பார்வையிட்டு அவற்​றைத் தூய்​மை​யாகப் பராமரிக்க உத்​தர​விட்​டார்.

மருத்​து​வர்​களின் கோரிக்​கையை ஏற்​று, கூடு​தல் கழிவறைகள் கட்ட பொதுப்​பணித்​துறை மூலம் நடவடிக்கை எடுப்​ப​தாக உறு​தி​யளித்​தார்.

மேலும், ஆய்​வின் போது முல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்டு அட்டை கோரிய பயனாளி ஒரு​வருக்​கு, உடனடி​யாக அட்டை வழங்க அதி​காரி​களுக்கு உத்​தர​விட்டார்.

கிண்டி கிங் நிலைய வளாகத்​தில் 4,63,544 சதுர அடி பரப்​பள​வில் ரூ.338.70 கோடி மதிப்​பீட்​டில் கட்​டப்​பட்டு வரும் குழந்​தைகளுக்​கான உயர் சிறப்பு மருத்​து​வ​மனை, ஆராய்ச்சி நிலைய கட்​டு​மானப் பணி​களை அமைச்​சர் ஆய்வு செய்​தார்.

அப்​போது, ஒப்​பந்​தத்​தில் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள், தரக்​கட்​டுப்​பாடு​களைப் பின்​பற்றி பணி​களை முடிக்க அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டார்.

மேலும், ஆயுஷ் மருத்​து​வர்​கள் அலோபதி மருந்​துகளைப் பரிந்​துரைப்​ப​தாக எழுந்​த புகார்​கள் குறித்து வி​சா​ரணை நடத்​தப்​படும் எனவும், நிலு​வை​யில் உள்ள மகப்​பேறு நிதி​யுதவி​களை உடனடி​யாக விடுவிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்​ என்​றும்​ அமைச்​சர்​ தெரிவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *