திமுக ஆட்சி போல தவெகவின் வேளாண் பட்ஜெட்டும் ஒரு நாடகம்; இனிக்க இனிக்க விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறார்கள்!! ஏமாற்றமே மிச்சம் – எடப்பாடி பழனிசாமி ….

சென்னை:
“வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம்பெறவில்லை. இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசித்ததில் புதிதாக ஒரு திட்டமும் இல்லை.

எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெகவின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம்பெறவில்லை.

இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசித்ததில் புதிதாக ஒரு திட்டமும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

மேகேதாட்டு குறித்தெல்லாம் பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தோம்.

வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக் கலாம். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத் தார்கள். ஆனால் அவை பட்ஜெட்டில் இல்லை.

பொது பட்ஜெட் போல, ஸ்டிக்கர் ஒட்டி வேளாண் பட்ஜெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி போல தவெகவின் வேளாண் பட்ஜெட்டும் ஒரு நாடகம். இனிக்க இனிக்க விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறார்கள்.

கடந்த திமுக அரசும், இப்போதைய தவெக அரசும் விவாசயிகளை ஏமாற்றி நாடகம் ஆடுகிறது. தேர்தல் வாக்குறுதி போல் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.

20 துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் பட்ஜெட் என்கிறார்கள். பிறகு ஏன் 20 துறைகளுக்கும் அமைச்சர் தேவை, மானிய கோரிக் கைகள் தேவை.

வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் 2.35 மணி நேரம் பேசியிருக்கிறார். இது தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாய மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *