சென்னை:
திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கோவையில் தந்தை பெரியார், சென்னையில் அறிஞர் அண்ணா, மதுரையில் கலைஞர் நூலகத்தை போன்று திருச்சியில் காமராஜர் பெயரில் நூலகம் அமைக்கப்படும். கோவை மற்றும் திருச்சி நூலக பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும்.
மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் ஓராண்டிற்குள் கட்டி எழுப்பப்பட்ட மாபெரும் நூலகத்தின் வழி, இதுவரை 16 லட்சம் மாணவர்களும் பொதுமக்களும் பயனடைந்திருக்கிறார்கள்.
திருச்சியில் ரூ.290 கோடி செலவில், அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்திற்கு , கல்வி கண் திறந்த‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயர் சூட்டப்படும்.
கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.
2 மாதங்களுக்கு ஒருமுறை நானே தலைமை தாங்கி உங்கள் தொகுதி என்ற திட்டத்தை ஆய்வு செய்கிறேன். நிதிக்குட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.