மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது; சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரை!!

சென்னை:

சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

* மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை.

* மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.

திராவிட இயக்கம்

* திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.

* பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.

* வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.

* கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.

மின் கட்டணம்

* தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும்.

* மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது.

* மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.

* அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார்.

முதலமைச்சர் விஜய்

* கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா?

* மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை.

* வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.

* திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது.

தவெக அரசு

* அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.

* தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது.

* வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.

* மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது.

மு.க.ஸ்டாலின்

* திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.

* மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம்.

* நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

* முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் பொறுப்பாக நிதி மேலாண்மை செய்தவர்.

* மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *