72-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளை திரைக்​கலைஞர்​களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று வழங்​கி​னார்!!

ஏக்தா (குஜ​ராத்):
72-வது ஆண்டு தேசிய திரைப்பட விருதுகளை திரைக்​கலைஞர்​களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று வழங்​கி​னார். நடிகர்​கள் தனுஷ், மம்​மூட்​டி, இசையமைப்​பாளர் ஜி.​வி.பிர​காஷ் உள்​ளிட்​டோர் விருதுகளைப் பெற்​றுக்​கொண்​டனர்.

இந்​திய திரைப்​படத்​துறை​யின் மிக உயரிய கவுர​வ​மாகக் கருதப்​படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்​கும் விழா நேற்று குஜ​ராத்​தின் ஏக்தா நகரில் (முன்பு கெவாட்​டியா என்று அழைக்​கப்​பட்​டது) மிக​வும் விமரிசை​யாக நடை​பெற்​றது.

தேசிய திரைப்பட விருது விழாக்​கள் இது​வரை டெல்லி விக்​ஞான் பவனில் மட்​டுமே நடத்​தப்​பட்டு வந்​தன. இந்​நிலை​யில் இந்த தேசிய விருதுகள் விழாவை, நாட்​டின் பிற மாநிலங்​களுக்​கும் கொண்டு செல்​லப்பட வேண்​டும் என்ற மத்​திய அரசின் புதிய முடி​வின்​படி, முதன்​முறை​யாக டெல்​லிக்கு வெளியே குஜ​ராத் மாநிலத்​தில் உள்ள ஏக்தா நகரில் நடத்​தப்​பட்​டது.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்​கேற்​று, 2024-ம் ஆண்​டுக்​கான சிறந்த திரைப்​படங்​கள், கலைஞர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப கலைஞர்​களுக்கு விருதுகளை வழங்கி சிறப்​பித்​தார்.

சிவ​கார்த்​தி​கேயன், சாய் பல்​லவி நடிப்​பில் தமிழில் 2024-ல் வெளி​யான அமரன் படத்​துக்​காக சிறந்த பின்​னணி இசைக்​கான விருதை குடியரசு தலை​வரிடம் இருந்து ஜி.​வி. பிர​காஷ் பெற்​றுக் கொண்​டார்.

இதைத் தொடர்ந்து சிறந்த தமிழ்ப்​படம் என்ற வகை​யில் தேர்​வான ராயன் திரைப்​படத்தை இயக்​கியதற்​காக நடிகர் தனுஷ் தேசிய விருதை பெற்​றுக் கொண்​டார்.

2024-ம் ஆண்​டின் தேசிய சிறந்த நடிகருக்​கான விருது 2 பேருக்கு வழங்​கப்​பட்​டது. மலை​யாளப் படமான பிரம்​ம​யுகம் படத்​துக்​காக சிறந்த நடிகருக்​கான விருதை நடிகர் மம்​மூட்டி பெற்​றுக் கொண்​டார். இந்​திப் படமான சந்து சாம்​பியன் படத்​தில் நடித்​ததற்​காக கார்த்​திக் ஆர்​யனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்​கப்​பட்​டது.

சிறந்த தேசிய நடிகைக்​கான விருதை ஆர்ட்​டிக்​கிள் 370 படத்​துக்​காக யாமி கவுதம் பெற்​றுக்​கொண்​டார். மேலும், கேப்​டன் மில்​லர் படத்​தில் நடித்​தற்​காக சிறந்த நடிகர் (சிறப்​புப் பிரிவு) விருது தனுஷுக்கு வழங்​கப்​பட்​டது.

அமரன் படத்தை இயக்​கிய ராஜ்கு​மார் பெரிய​சாமிக்கு சிறந்த இயக்​குநருக்​கான விருதும், ஒட்​டுமொத்த பொழுது​போக்கு படமாகத் தேர்​வான கல்கி 2898 ஏடி படத்​துக்​காக அந்​தப் படத்​தின் தயாரிப்​பாள​ருக்​கும் விருது வழங்​கப்​பட்​டது.

சிறந்த துணை நடிகருக்​கான விருது சஞ்​சஸ் மிர்​ஸாவுக்​கும் (படம்: பக்​சக்), துணை நடிகைகளுக்​கான விருது ரூபஸ்ரீ வர்​கடிக்​கும் (மித்​யா), சச்​சனா நமி​தாஸுக்​கும் (தமிழ் திரைப்​படம் மகா​ராஜா ) வழங்​கப்​பட்​டது.

சிறந்த அறி​முக இயக்​குநர் விருது ரந்​தீப் ஹூடாவுக்கு (ஸ்​வதந்தர வீர சாவர்க்​கர்) வழங்​கப்​பட்​டது. தேசிய, சமூக மதிப்​பு​களை உயர்த்​திய படமாகத் தேர்வு செய்​யப்​பட்ட கேப்​டன் மில்​லர் படத்​துக்கு சிறப்பு விருது வழங்​கப்​பட்​டது. சிறந்த இசை அமைப்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்ட சஷ்வத் சச்​சேவுக்கு (ஆர்ட்​டிகிள் 370, கல்கி 2898 ஏடி படங்​கள்) விருது வழங்​கப்​பட்​டது.

சிறந்த திரைப்​பட​மாக தேர்வு செய்​யப்​பட்ட ஆர்ட்​டிகிள் 370 படத்​துக்​கான விருதை இயக்​குநர் ஆதித்யா தார் பெற்​றுக்​கொண்​டார். சிறந்த திரைக்​கதைக்​கான விருதுகளை சுகு​மார் (புஷ்​பா-2), யோகேஷ் தேஷ்​பாண்டே (ஸ்​வர்​கந்​தர்வ சுதர் பாட்​கே) ஆகியோ​ருக்​கும், சிறந்த வசனத்​துக்கு வெங்கி அட்​லூரிக்​கும் (லக்கி பாஸ்​கர்), சிறந்த ஒளிப்​ப​தி​வாள​ருக்கு ஷெனாத் ஜலாலுக்​கும் (பிரம்​ம​யுகம்), சிறந்த புரொக்​சன் டிசைனுக்​கான விருதை நிதின் ஜிஹானி சவுத்ரி (கல்கி 2898 ஏடி) உள்​ளிட்​டோருக்கு விருதுகளை குடியரசுத் தலை​வர் முர்மு வழங்கி கவுர​வித்​தார்.

சென்​னை​யில்​… தேசிய திரைப்பட விருது வழங்​கும் விழாக்​கள் வழக்​க​மாகவே டெல்​லி​யில்​தான் நடை​பெறும். 1954-ம் ஆண்டு முதல் இந்த நடை​முறை கடைப்​பிடிக்​கப்​பட்டு வந்​தது. ஆனால், 1971-ம் ஆண்டு மட்​டும் 17-வது தேசிய திரைப்பட விருது விழா தமிழகத்​தின் தலைநகர் சென்​னை​யில் நடத்​தப்​பட்டு விருதுகள் வழங்​கப்​பட்​டன. அதன் பிறகு முதன்​முறை​யாக டெல்​லியை விட்டு குஜ​ராத்​தின் ஏக்தா நகரில் தேசி​யத் திரைப்பட விருதுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

மம்​மூட்​டிக்கு 4-வது தேசிய விருது: மலை​யாள நடிகர் மம்​மூட்டி 4-வது முறை​யாக சிறந்த நடிகருக்​கான தேசிய விருதை பெற்​றுள்​ளார். இதற்கு முன்பு அவர் ஒரு வடக்​கன் வீர கதா, மதி​லுகள் படங்​களுக்​காக முதல் முறை​யும் (1990), விதேயன், பொந்​தன் மாடா (1994) படங்​களுக்​காக 2-வது முறை​யும், டாக்​டர் பா​பா​சாகேப் அம்​பேத்​கர் (1999) படத்​துக்​காக 3-வது முறை​யும் சிறந்த நடிகருக்​கான தேசி​ய விருதைப்​ பெற்​றிருந்​தார்​. தற்​போது 4-வது தேசி​ய விருதை பிரம்​மயுகம்​ படத்​துக்​காக பெற்​றுள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *