தமிழகம் – ஆந்​திரா கடல் பகு​தி​யில் தமிழக மீனவர்​கள் சுமுக​மாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டிருப்​ப​தாக மீன்​வளத்​துறை அமைச்​சர் ஸ்ரீநாத் தகவல்!!

சென்னை:
தமிழகம் – ஆந்​திரா கடல் பகு​தி​யில் தமிழக மீனவர்​கள் சுமுக​மாக மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டிருப்​ப​தாக மீன்​வளத்​துறை அமைச்​சர் ஸ்ரீநாத் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று நேரமில்லா நேரத்​தில் முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி பேசுகை​யில், “மயி​லாடு​துறை மாவட்​டம், திரு​முல்​லை​ வாசல் ஊராட்​சி, கொடு​வாய் கிராமத்​தைச் சேர்ந்த 4 மீனவர்​கள் சவுதி அரேபி​யா​வில் தங்கி மீன்​பிடித்து வந்​தனர்.

அப்​போது ஈரான் கடல் கொள்​ளை​யர்​கள் தாக்​குதலில் மாவீரன் என்ற மீனவர் உயி​ரிழந்​தார்.

சென்னை காசிமேட்​டில் இருந்து சென்ற தமிழக மீனவர்​கள் ஆந்​திர கடல் பகு​தி​யில் மீன் பிடித்​துக் ​கொண்​டிருந்​த​போது, கடந்த 17-ம் தேதி, ஆந்​திர அதி​காரி​கள் 8 விசைப் படகு​களை பறி​முதல் செய்​து, அவற்​றில் இருந்த மீனவர்​களை கைது செய்து சிறை​யில் அடைத்​துள்​ளனர். இவ்​விரு நிகழ்​வு​கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்​றார்.

இதே பிரச்​சினை குறித்து பாமக எம்​எல்ஏ சிவக்​கு​மார், திமுக எம்​எல்ஏ செந்​தில் செல்​வன், இந்​திய கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ டி.​ராமச்​சந்​திரன், மார்க்​சிஸ்ட் எம்​எல்ஏ செல்​வசு​வாமி ஆகியோ​ரும் பேசி​னார்.

இதற்கு அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா அளித்த பதிலில், “சவுதி அரேபி​யா​வில் தமிழக மீனவர்​கள் 4 பேர் மீது கடந்த ஆக. 10-ம் தேதி, ஈரானிய கடல் கொள்​ளை​யர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டுள்​ளனர். இதில் மீனவர் மாவீரன் உயி​ரிழந்​தார்.

காயமடைந்த சங்​கர் ஆபத்​தான நிலை​யில் சவுதி அரேபியா ராணுவ மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். லேசான காயமடைந்த பால்​ராஜ், மணி​கண்​டன் ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்​ட​தாக தகவல் வந்​துள்​ளது.

இச்​சம்​பவம் தொடர்​பாக புலன் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதனால் மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

இவரது உடலை தமிழகம் கொண்​டு​வர​வும், காயமடைந்​த வர்​களை அழைத்து வரவும் தேவை​யான நடவடிக்​கைகளை மயிலாடு​துறை மாவட்ட ஆட்​சி​யர் மேற்​கொண்டு வரு​கிறார்.

மேலும் தமிழக அரசின் மீன்​வளத்​துறை செய​லா​ளர், மத்​திய வெளி​யுறவுத் துறை மூலம் தூதரக நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார்” என்​றார்.

தொடர்ந்து மீன்​வளத்​துறை அமைச்​சர் ஸ்ரீநாத் பேசுகை​யில், “கடந்த ஜூலை 2-ம் தேதி நிதித்​துறை, மீன்​வளத்​துறை அமைச்​சர்​கள் தலை​மை​யில் படகு உரிமை​யாளர்​கள் மற்​றும் மீனவப் பிர​தி​நி​தி​கள் உடனான கலந்​தாய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

சென்னை மண்டல மீன்வள இணை இயக்​குநர், உதவி இயக்​குநர் மற்​றும் படகு உரிமை​யாளர்​களு​டன் ஆந்​திர மாநில மீன்​வளத்​துறை அலு​வலர்​களு​டன் கூட்​டம் நடத்தி படகு​களை விடுவிக்க நடவடிக்கை எடுக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

ஆந்​திர மாநிலம் நெல்​லூர் மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் ஜூலை 11-ம் தேதி இரு மாநிலங்​களுக்கு இடையே​யான குழுகூட்​டத்​தில் சிறை பிடிக்​கப்​பட்ட சென்னை படகு​கள், மீனவர்​களை உடனடி​யாக விடுவிக்க வலி​யுறுத்​தப்​பட்​டது.

மீன்​பிடி ஒழுங்​கு​முறை சட்​டத்​தின்​படி படகு​களை விடுவிக்குமாறு கேட்​டுக் கொள்​ளப்​பட்​டது. தமிழகம்- ஆந்​திரா இடையே மீனவர்​கள் சுமுக​மாக மீன்​பிடிக்க நடவடிக்கை எடுக்​கப்படுகிறது” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *