சென்னை:
சட்டப்பேரவையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் வினோத் நேற்று பதில் அளித்தார்.
அப்போது, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியதாவது:
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளின் தரம் குறையாமல் சேமித்துப் பாதுகாக்க தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தருமபுரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் ரூ.11.64 கோடி செலவில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 285 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வருவாயை மின்னணு முறையில் சேகரிக்க 600 விற்பனை முனையக் கருவிகள் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் பரிமிளகாய், பொய்யூர் கத்தரிக்காய், சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய், திருவையாறு இலை வாழை, எறையூர் கருணைக்கிழங்கு, கடலூர் வெட்டிவேர், மணப்பாறை கத்தரிக்காய், ஊட்டி பூண்டு, ஜவ்வாது பேய் எள் ஆகிய 10 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் ஒதுக்கப்படும்.
வெற்றிலை சாகுபடியில் உற்பத்தி மற்றும் இலைத் தரத்தை உயர்த்தி விவசாயிகளின் வருவாயைப் பெருக்க புதிய திட்டம் செயல்படுத் தப்படும்.
100 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கு மின்னணு ஈரப்பதமானிகள் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் அரவைப் பகுதியில் இயங்கி வரும் இயந்திரங்கள் அனைத்தையும் ஒருங்கி ணைத்து, தானியங்கி ஆலை யாக மாற்றப்படும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், இதர பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக புதிய பயிற்சி மையம் அமைக்கப் படும்.
வேளாண் பொறியியல் துறையில் புதிதாக நியமிக்கப் பட்ட அரசு அலுவலர்களுக்கு திருச்சியில் உள்ள வேளாண் பொறியியல் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 34 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.