லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​ய இந்திய வீராங்கனை அனஹத் சிங்!!

லண்டன்:
லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் இந்திய வீராங்கனை அனஹத் சிங் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், 11-ம் நிலை வீராங்கனை​யான பெல்​ஜி​யத்​தின் நீலே கிலிஸுடன் மோதி​னார்.

39 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் அனஹத் சிங் 13-11, 4-11, 11-8 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்​னேறி​னார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 42-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ரமித்டாண்​டன் தரவரி சை​யில் 15-வது இடத்​தில் உள்ள இங்கிலாந்தின் முகமது எல்​ஷார்​பாகி​யிடம் 12-10, 11-9 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *