”டி20 வரலாற்றில் முதல் முறையாக 3 சூப்பர் ஓவர்கள்” !!

சென்னை;
டி20 போட்டியில் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும். ஆனால் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் ஒன்றல்ல, இரண்டல்ல, 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.


நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது.

இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

முதல் சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 19 ரன்கள் அடிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை அடித்தது.
இதனால் 3 ஆவது சூப்பர் ஒவ்வரு நடத்தப்பட்டது.

அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *