பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை – விஜய் சேதுபதி!!

சென்னை:
‘பிக்பாஸ் சீசன் 10’ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார்.


இந்நிலையில் நேற்று முதல் முறையாக இந்த சீசனில் வந்தவர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார்.

இதுதொடர்பான புரோமோக்கள் வெளியாகி உள்ளன. அந்த புரோமோக்களில் இந்த சீசனின் முதல் கேப்டன் ஷாதிகாவிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார்.

“தலைவர் என்றால் என்னன்னே தெரியாமல், தலைமைத்து வம்னா என்னன்னு புரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதி களை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளும், பொறுப் புகளும் வரும்போது எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டு விட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது ஒரு தலைவருக்கான தரம் இல்லை. அது ஏமாற்று வேலை.” என்று ஷாதிகாவை சாடுகிறார்.

விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சு முதலமைச்சர் விஜய் யை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *