தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்கம் வேலை நிறுத்தம்!!

சென்னை:
தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்க பொதுக்​குழு ஞாயிற்றுக் ​கிழமை நடைபெற்​றது.

அதில், வரு​வாய் பகிர்வு முறையில் மட்​டுமே படங்​களைத் தயாரிப்​பது என்​றும் இந்த விஷயத்தை அனை​வரின் கவனத்​துக்​குக் கொண்டு செல்​லும் வகை​யில் மே 2-ம் தேதி அடை​யாள வேலை நிறுத்​தம் செய்​ய​வும் தீர்​மானம் நிறைவேற்​றப் பட்​டது.

இந்​நிலை​யில் தென்​னிந்​திய நடிகர் சங்​கம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மே 2-ம் தேதி வேலை நிறுத்​தம் செய்ய தீர்​மானம் நிறைவேற்றி இருப்​பது பேர​திர்ச்​சி​யை​யும் வேதனை​யும் அளிக்​கிறது.

தயாரிப்​பாளர்​களின் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண உறு​துணை​யாக நடிகர் சங்கம் இருந்து வரும் நிலை​யில், தன்​னிச்சை யாக இந்த வேலை நிறுத்த அறி​விப்பை வெளி​யிட்​டது வருத்​தத்​துக்​குரியது. வேலை நிறுத்​தம் என்​னும் அணுகு​ முறையை நடிகர் சங்​கம் என்​றுமே ஆதரிக்​காது.

நடிகர்​கள், வரு​மான பகிர்வு முறை​யில் பணி​யாற்​று​வது தொடர்பாக தங்​கள் தரப்​பிலிருந்து எங்​களுக்கு எந்​த​வித கடிதமோ, மின்​னஞ்​சலோ அனுப்​பப்​பட​வில்​லை. அது தொடர்​பாக எந்​த​வித பேச்​சு​வார்த்​தை​யும் நிகழ்த்த அழைக்​க​வில்​லை.

இது​வரை எங்​கள் தரப்​பிலிருந்து அளிக்​கப்​பட்ட புகார் பட்​டியலில் உள்ள எந்த புகாருக்​கும் எவ்​வித தீர்​வும் வழங்​கப்​ப​டா​மல் நீண்டு வரு​வதை​யும் தாங்​கள் மறுக்க இயலாது.

ஆகவே, இந்த தன்​னிச்​சை​யான வேலை நிறுத்த அறி​விப்​பைத் திரும்​பப் பெறு​மாரும், முன்​னரே ஒப்​புக்​கொண்​டபடி, தேர்​தல் முடிவு​கள், மே 4ம் தேதி வெளி​யான பிறகு, பொருத்​த​மான தேதியில் இரு அமைப்​பின் பிர​தி​நி​தி​களும் சந்​தித்து அடுத்த கட்ட செயல்​பாடு​கள் குறித்து ஆலோ​சித்து தீர்​மானிக்​கலாம். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *