டி20 தொடரை இந்திய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தல்!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தல்.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் இறங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.

அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 34 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்களை குவித்தது.

கடின இலக்கை துரத்திய ஆப்கான்ஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்முல்லா குர்பாஸ் 15 ரன்களும், கேப்டன் இப்ராகிம் சத்ரான் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஓமர்சாய் மற்றும் நூர் உல் ரஹ்மான் ஆகியோர் முறையே 17 மற்றும் 11 என இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது. இதனால் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *