நடிகர் ஹர்சத் கானின் வேப்பிலை ஆடை காமெடி: குலுங்கி, குலுங்கி சிரித்த கதாநாயகிகள்… !!

சென்னை:
நடிகர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் மீசைய முறுக்கு-2 படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜெ ஆச்சார், ஹர்சத் கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 25-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ஹர்சத்கான் காமெடி பேச்சு அரங்கையே சிரிப்பில் குலுங்க வைத்தது.

அவர் பேசும்போது, படத்தின் முக்கியமான காமெடி காட்சி ஒன்று உள்ளது. அதற்கு பின்னால் செம காமெடி உள்ளது. அதை என்னால் மறக்கவே முடியாது.

அந்த காலத்தில் மனிதர்கள் இலைகளை கட்டிக் கொண்டு வாழ்வார்கள்.

அது போன்ற ஒரு சீன் நானும், ஆதியும் தலை மற்றும் உடலில் பச்சை இலைகளை கட்டிக் கொண்டு வர வேண்டும். எனக்கு முதலில் தெரியாது.

படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் இது தான் உங்கள் காஸ்ட்யூம் என்று இலைகளை எடுத்து வருகிறார்கள்.

நான் அவர்களிடம் காஸ்ட்யூம் கொடுக்க சொன்னால் வேப்பிலையை கொடுக்கிறீர்கள் என்றேன். இது தான் காஸ்ட்யூம் என்றார்கள். டவுசர் தருவீர்களா? என்று கேட்டேன். இல்லை முழுவதும் இலைதான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஆதி வேண்டாம் என்று சொல்வார் என்று பார்த்தால் அவர் எனக்கு முன்பு போட்டுக் கொண்டு நிற்கிறார். ஹீரோவே போட்டுக் கொண்டு நிற்கிறார்.

நமக்கென்ன என இலையை கட்டிக் கொண்டு வரும் போது காற்றடிக்க தொடங்கி விட்டது. அப்போது நான் கட்டி இருந்த இலை காற்றில் பறந்து விட்டது. என்னடா பன்ன என்று யோசித்து கொண்டிருந்தேன்.

அறைக்குள் இருந்து கொண்டு தலையை மட்டும் எட்டிப் பார்த்து அண்ணே வரமுடியல நீங்க கொஞ்சம் வாங்க என்று நான் சொன்னதும் ஆதி இலை தலையெல்லாம் கட்டிக் கொண்டு ஆடிக் கொண்டே வருகிறார்.

அவர் வந்தவுடன் அண்ணே உங்க 2 இலையை எனக்கு கொடுங்க என கேட்டு நான் வாங்கி கட்டிக் கொண்டேன். அவர் என்னை சுற்றிபார்க்கிறார் சரிடா உனக்கு ஏதும் தெரியவில்லை.

எனக்கு ஏதும் தெரியுதா? என கேட்டார். நான் அவரை திரும்பி பார்த்தேன் அவருக்கு தெரிந்தது. பரவாயில்லை போ நம்ம தப்பித்தா போதும் என அவரை விட்டு விட்டேன்.

2 பேரும் நடந்து போகிறோம். எல்லோரும் எங்களை முன்னால் பார்க்கவில்லை.

பின்னால் பார்க்கிறார்கள். ஆதி என்னிடம் என்னடா ஹர்சத் ஒன்னுமே புரியல என்று கேட்டார். உங்களுக்கு புரியல எனக்கு புரியும் என சொன்னேன்.

ஆனால் நான் வேண்டிக் கொண்டதெல்லாம் படத்தில் கதாநாயகிகளான கெட்டிகா, சைத்ரா, ரம்யா செட்டுக்கு வந்து விடக்கூடாது என வேண்டினேன். அது போல் அவர்கள் வரவில்லை.


இவ்வாறு மேடையில் இருந்து அவர் பேசியதும் கதாநாயகிகள் 3 பேரும் வெட்கத்தில் விழுந்து விழுந்து சிரித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *