இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா 37 ரன்னும், சரித் அசலங்கா 31 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியாக ஆடியது.
ஜோஸ் பட்லர் 16 பந்தில் 37 ரன்னும், ஹாரி புரூக் 8 பந்தில் 23 ரன்னும் குவித்தனர்.
டாம் பாண்டன் 24 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 52 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 12.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அத்துடன் டி20 தொடரை 2-0 என இங்கிலாந்து கைப்பற் றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது லியாம் டாசனுக்கு வழங்கப்பட்டது.
மூன்றாவது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.