திருச்​செந்​தூர் கோயி​லில் சஷ்டி யாகசாலை வழக்​க​மான இடத்​திலேயே செயல்பட வேண்​டும்; உயர் நீதிமன்றம் உத்தரவு!!

மதுரை:
திருச்​செந்​தூர் கோயி​லில் சஷ்டி யாகசாலை இந்தாண்டும், வரும் ஆண்​டும் வழக்​க​மான இடத்​திலேயே செயல்பட வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

திருச்​செந்​தூர் சிவ​ராம சுப்​பிரமணிய சாஸ்திரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில்,’திருச்​செந்​தூரில் நவ.10-ல் தொடங்​கும் கந்த சஷ்டி விழாவுக்​கான யாகசலையை வேறு இடத்​துக்கு மாற்ற அறநிலை​யத் துறை முடிவு செய்​துள்​ளது.

ஆகம விதி​களுக்கு முரணாக யாகசாலையை வேறு இடத்​துக்கு மாற்​றக் கூடாது என உத்​தர​விட வேண்​டும்’ என்று கூறி​யிருந்​தார்.

இதே கோரிக்​கைக்​காக கோயில் ஸ்​வாந்​திர பிர​பாலன ஸ்தலாத்​தார் சபையின் செய​லா​ளர் முத்து​கிருஷ்​ணன் அய்​யர் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இரு மனுக்​களி​லும் திருச்​செந்​தூர் கோயில் வளாகத்​தில் வள்ளி, தெய்​வானை சந்​நி​தி​களுக்கு இடையே உள்ள முதலா​வது பிரகாரத்​தில் சஷ்டி யாகசாலையை வேறு இடத்​துக்கு மாற்​றக்​கூடாது எனத் தெரி​விக்​கப்​பட்​டது.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன. அரசுத் தரப்​பில், ‘யாகசாலை தொடர்​பாக அறங்​காவலர்​கள் குழு இன்​னும் இறுதி முடிவெடுக்​க​வில்லை. அதற்​குள் மனுத் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

யாகசாலை தொடர்​பாக 2009-ல் ரிட் மேல்​முறையீட்டு மனுவில் தெளிவான தீர்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன் அடிப்​படை​யில் இந்த மனுக்​கள் விசா​ரணைக்கு உகந்​தது அல்ல’ எனத் தெரி​விக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தரவு: கோயில்​களில் பன்னெடுங்​காலமாகக் கடைப்​பி​டிக்​கப்​படும் நடைமுறையிலிருந்து வில​கு​வதை நியாயப்​படுத்த முடி​யாது.

அரசுத் தரப்​பில் சுட்​டிக்​காட்​டியுள்ள 2009 உத்​தரவை கவனமாக ஆய்வு செய்​த​போது, கோயில் நிர்​வாகம் யாகசாலையை கோயில் சுற்​றுச் சுவருக்கு வெளியே அமைக்​கத் திட்​ட​மிட்​டபோது ​​அது ஆகம விதி​களுக்கு முரணானது என்று கூறி எதிர்ப்​புத் தெரி​விக்​கப்​பட்​டது.

அதில், கோயிலுக்​குள் யாகசாலை அமைக்​கும் வழக்​கத்தை மாற்​றவே முடி​யாத ஒரு கட்​டாய மத நடைமுறை​யாகக் கருதப்​பட முடி​யாது.

யாகசாலையை கோயிலுக்கு வெளியே அமைப்​ப​தற்​குத் தடை ஏதும் இல்​லாதவரை இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை மீறிய செய​லாகாது எனத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த முடி​வி​லிருந்து நாங்​கள் மாறு​படு​கிறோம். இது 2009 உத்​தர​விலேயே ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டது. இருப்​பினும் இந்த உத்​தரவு சரியானதா? இல்லையா? என்​பதை மறு​பரிசீலனை செய்ய 3 நீதிப​தி​கள் அமர்வு அமைப்​ப​தற்​கான வழக்கு ஆவணங்​களை தலைமை நீதிப​திக்கு அனுப்ப பதிவுத்​துறைக்கு உத்​தர​விடப்​படு​கிறது.

இருப்​பினும் அவசரம் இருப்​ப​தால் இடைக்​கால நிவாரணம் வழங்க முடிவு செய்​யப்​படு​கிறது. 2009-ம் ஆண்​டின் ரிட் மேல்​முறையீட்டு மனுவில் முரணான தீர்ப்பு இல்​லாமல் இருந்​தால் மனுக்​களை நேரடி​யாக அனுமதித்​திருப்​போம்.

யாகசாலை எப்​போதும் இருந்த இடத்​திலேயே அமைய வேண்​டும் என்று ‘வித்​யாகர்’ கூறும்​போது ​​கோயில் நிர்​வாகத்​தினர் அதற்​கேற்​பச் செயல்​பட வேண்​டியது அவ​சி​ய​மாகும்.

எனவே, யாகசாலையை வேறு இடத்​துக்கு மாற்ற இடைக்​காலத் தடை விதிக்​கிறோம். இந்த ஆண்​டும் வரும் ஆண்​டுகளி​லும் ‘ஸ்​கந்த சஷ்டி’ யாகசாலை வழக்​க​மான இடத்​திலேயே அமைக்​கப்​பட வேண்​டும்.

இந்த இடைக்​கால உத்​தரவு முதன்மை ரிட் மனுவின் இறுதித் தீர்ப்​புக்கு உட்​பட்​டது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறியுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *