​தி​முக​வில் விரை​வில் 110 மாவட்​டங்​களுக்​கான பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும் – உதயநிதி தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை!!

சென்னை:
‘​தி​முக​வில் விரை​வில் 110 மாவட்​டங்​களுக்​கான பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும்’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தலை​மை​யில் நடந்த கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆட்​சியை பறிகொடுத்த நிலை​யில் கட்​சி​யைப் பலப்​படுத்​தும் நோக்​கில் மறுசீரமைப்​புக் குழு அமைக்​கப்​பட்​டது. அக்​குழு​வினர் தமிழகம் முழு​வதும் ஆய்வு செய்து அக்​கட்​சித் தலை​வர் மு.க.ஸ்​டா​லினிடம் அறிக்​கை​யாகச் சமர்ப்​பித்​தனர்.

அதன் அடிப்​படை​யில் நடை​பெற்ற தலை​மைச் செயற்​குழு கூட்​டத்​தில், “தி​முக கட்சி மாவட்​டங்​களின் எண்​ணிக்கை 110-ஆக உயர்த்​தப்​படு​கிறது. மாவட்​டச் செய​லா​ளரின் அதி​கபட்ச வயது 70-ஆக நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

ஒரு மாவட்​டச் செய​லா​ளர் அதி​கபட்​ச​மாக 3 முறை மட்​டுமே அந்​தப் பொறுப்​பில் இருக்க முடி​யும்” என்​பது உள்​ளிட்ட பல முக்​கிய தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

இந்​நிலை​யில் திமுக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று மறுசீரமைப்​புக் குழு​வினருடன் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அதில், ‘அடுத்​த​தாக வரவிருக்​கும் இடைத்​தேர்​தலுக்கு முன்​பாக திமுக உட்​கட்​சித் தேர்​தலை நடத்தி முடிக்க வேண்​டும்’ எனத் திட்​ட​மிடப்​பட்​ட​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து திமுக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் திமுக தொண்​டர்​களைச் சோர்​வடையச் செய்​திருந்​தன.

அதன் பிறகு ஆளுங்​கட்​சி​யினர் எங்​கள் தலை​வர்​களைக் கைது செய்​தது, கடுமை​யான விமர்​சனங்​களை முன்​வைத்​தது போன்​றவை தொண்​டர்​களிடத்​தில் புதிய உத்​வேகத்​தைக் கொடுத்​தன.

இதனால் திமுக​வினர் நடந்து முடிந்த இடைத்​தேர்​தலில் கடுமை​யாக பணி​யாற்​றி​னார். அதன் வெளிப்​பாடு​தான் இடைத்​தேர்​தலில் மிக​வும் குறை​வான வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தவெக வெற்றி பெற்​றது.

இன்​னும் சற்று கூடு​தலாக உழைத்​தால் நிச்​ச​யம் தவெகவை வீழ்த்​தி​விடலாம் என்ற நம்​பிக்கை திமுக தொண்​டர்​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.

இப்​படி​யான சூழலில்​தான் விரை​வில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ள​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதையடுத்து திமுக மறுசீரமைப்​புக் குழு​வினருடன் உதயநிதி நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது, “மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கான வயது வரம்பை 5 ஆண்​டு​கள் உயர்த்த வேண்​டும் எனச் சில மாவட்​டச் செய​லா​ளர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர்” என மறுசீரமைப்​புக் குழு​வினர் உதயநி​தி​யிடம் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​துப் பேசிய அவர், “விரை​வில் உட்​கட்​சித் தேர்​தலை நடத்தி முடிக்க வேண்​டும். அதற்கு முன்பு மாவட்​டப் பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும்.

விரை​வில் ஒன்​றி​யம், பேரூர், வட்​டம், பகுதி என வாரி​யாகப் பிரித்து திமுக தலை​மைக்கு அறிக்​கை​யைச் சமர்ப்​பிக்க வேண்​டும். இதில் தவறுகள் ஏதும் இருக்​கும் பட்​சத்​தில், கட்சி சாராத ஒரு அமைப்​பைக் கொண்டு அது சீர்​திருத்​தப்​படும்.

இடைத்​தேர்தலுக்கு முன்​பாகவே இந்த உட்​கட்​சித் தேர்​தலை நடத்தி முடித்​து, திமுக தன்​னுடைய அனைத்து உட்​கட்​சிப் பணி​களை​யும்​ நிறைவு செய்​து இடைத்​தேர்​தலுக்​குத்​ த​யா​ராக வேண்​டும்​. இடைத்​தேர்​தலில்​ வெற்​றி பெற்​றே ஆக வேண்​டும்” எனத்​ தெரி​வித்​த​தாகக்​ கூறப்​படு​கிறது. இவ்​​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *