ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய தளம் அறிமுகம்!!

சென்னை:
ஆம்னி பேருந்து டிக்​கெட் முன்​ப​திவுக்கு புதிய தளம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. பயணிகளுக்கு நியாய​மான கட்​ட​ணத்​தில் சேவை வழங்​கு​வதே இதன் நோக்​கம் என உரிமையாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகம் முழு​வதும் 6,000-க்​கும் மேற்​பட்ட ஆம்னி பேருந்​துகள் மூலம் தினமும் 2.50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்த பேருந்​துகளுக்​கான டிக்​கெட்​களை அந்​தந்த பேருந்து நிறு​வனங்​களின் இணை​யதளம் மூலம் முன்​ப​திவு செய்​ய​லாம்.

அனைத்து நிறு​வனங்​களின் பேருந்​துகளுக்​கும் ஒரே தளத்​தில் முன்​ப​திவு செய்​யும் வகை​யில் தனியார் செயலிகளும் உள்​ளன. பண்​டிகை காலத்​தில் இந்த செயலிகளில் அதிக கட்​ட​ணம் நிர்​ணயம் செய்​யப்​படுவ​தாக குற்​றச்​சாட்டு தொடர்ந்து வரு​கிறது.

மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்​களும் இந்த தளங்​களுக்கு அதிக கமிஷன் கொடுக்க வேண்​டியுள்​ள​தாக தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், மத்​திய அரசின் தொழில் மற்​றும் உள்​நாட்டு வர்த்​தக மேம்​பாட்​டுத் துறை​யின் முன்​னெடுப்​பான ஓஎன்​டிசி எனப்​படும் திறந்த டிஜிட்​டல் வர்த்​தக வலை​யமைப்​புடன் ‘ரோமி மொபி​லிட்டி’ நிறு​வனமும், தமிழகத்​தின் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்​கங்​களும் இணைந்து ‘ரோமி’ (Roamie) என்ற புதிய பேருந்து டிக்​கெட் முன்​ப​திவு இணை​யதளம் மற்​றும் செயலியை (www.roamie.co.in) உரு​வாக்​கி​யுள்​ளனர்.

இதன் அறி​முக விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. புதிய முன்​ப​திவு தளம் குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்​கள் சங்​கத் தலை​வர் அன்​பழகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

பயணிகளுக்கு நியாய​மான கட்​ட​ணத்​தில் சேவை வழங்​கும் நோக்​கில் ‘ரோமி’ தளம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இத்​தளத்​தில் 100-க்​கும் மேற்​பட்ட பேருந்து உரிமையாளர்​கள், 1,000-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள், 1,000-க்​கும் மேற்​பட்ட வழித்​தடங்​கள் உள்​ளன.

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்​கங்​கள் மூலம் மேலும் பல உரிமையாளர்​களை இணைக்​கும் பணி நடந்து வரு​கிறது.

இணை​ய​வழி டிக்​கெட் விற்​பனைக்​காக முன்​ப​திவு தளங்​களை சார்ந்​திருக்​கும் பேருந்து உரிமையாளர்​களுக்கு கமிஷன் ஒரு முக்​கியச் செல​வாக உள்​ளது.

இந்த செலவை குறைத்து, ஒவ்​வொரு டிக்​கெட்​டிலும் உரிமையாளர்​களுக்கு கிடைக்​கும் வரு​வாயை மேம்​படுத்த இது உதவும். செல​வைக் குறைத்து, அதன் பயனை பயணிகளுக்​கும் வழங்​கு​வதே இதன் நோக்​கம். இவ்​வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *